December 26, 2007
இரத்தம் தோய்ந்த செங்கல் - குஜராத்!
கொதிக்கின்ற - தார்ச்சாலையில் நிர்வாணமாக கிடக்கிறாள் அந்தப் பெண் - பிணமாக. அவள் உடம்பிலிருந்து உரித்தெறியப்பட்ட சேலை அருகே சுருண்டு கிடக்கிறது. கிழித்தெறியப்பட்ட அவளது உள்ளாடையின் ஒரு பாதியை தவிப்புடன் இறுகப் பற்றியிருக்கிறது அவளது இடது கை. உடலும் கையும் நசுங்கிச் சிவந்து ரத்தம் உறைந்திருக்கிறது. இடது தொடை முழுவதும் ரத்தம். உடலுக்கருகில் பரிதபமாக கிடக்கிறது அவளது பிளாஸ்டிக் செருப்பு.
அருகே ரத்தமும், வெறுப்பும் தோய்ந்த ஒரு செங்கல். கொலைகாரர்கள் அவள் மீது எறிந்த இறுதி ஆயுதம், அதுவும் கிடக்கிறது.
அவளது பெயர் கீதாபென். மார்ச் 25ம் தேதி அகமதாபாத்தில் அவளுடைய வீட்டு வாசலிலேயே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பட்டப்பகலில் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.
அவள் ஒரு இந்துப் பெண். இருந்தும் ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மாபாதகத்தைச் செய்துவிட்டாள். "அவனை ஒப்படைத்து விடு" என்று வீட்டு வாசலில் நின்று ஆர்.எஸ்.எஸ் காலிகள் மிரட்டிய போது ஒருபாறையைப் போல அவள் உறுதியாக நின்றாள் - கணவன் தப்பிச்செல்லும் வரை.
முசுலீமைக் காதலித்த குற்றம், அவன் உயிரைக் காப்பாற்றிய குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அந்தக் கணமே, அங்கேயே அவள் நிர்வாணமாக்கப்பட்டு, நடுத்ததெருவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.
- செய்தி: Times of India, 19th April/2002.
கொதிக்கின்ற தார்ச்சாலையில்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்
அந்தப் பெண்.
கீதா பென்னின்
உயிரைப் பறித்த செங்கல்
ஆயிரக்கணக்கான முசுலீம்களின்
உயிரைக்குடித்த அதே செங்கல்
செங்கல் காவு கொண்ட
கீதா பென்னின் உயிர்
காவுக்குத் தப்பிய
அவள் கணவனின் உயிர்
கீதாபென் - கள் பலர்
குஜராத்தில் இருந்திருந்தால்
கீதா பென்
நடுவீதியில் ஆடையின்றி
பிணமாகக் கிடந்திருக்க
மாட்டாள்.
குஜராத்தும்
அம்மணமாக நின்று
அவளை வேடிக்கை
பார்த்திருக்காது.
இந்து - முசுலீம் தம்பதியர். திருமணப் பதிவு அலுவலகத்திலிருந்தும் பிற அரசு ஆவணங்களிலிருந்தும் இத்தகைய கலப்பு மணம் புரிந்தோரின் பட்டியலை சேகரித்துக் கையில் வைத்துக் கொண்டு தம்பதியரில் முசுலீமை மட்டும் கொலை செய்திருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் இந்து மதவெறி இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி குஜராத் சமூகத்தின் பண்பாடும் பாசிசமயமாகி வந்திருக்கிறது. மத மறுப்புத் திருமணத்தைக் கேலி செய்வது, இழிவு படுத்துவது, குடியிருக்க இடம் தராமல் தனிமைப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்திருக்கின்றன. இதனை முகாந்திரமாக வைத்தே பல முசுலீம் எதிர்க் கலவரங்கள் நடந்துள்ளன.
இவையனைத்திற்கும் மேலாக மாநில பாரதீயஜனதா அரசு ஆகஸ்டு'98ல் காவல் துறைக்கு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிகையை அனுப்பியது. "மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்து முசுலீம் திருமணங்கள் நடைபெறுகின்றன; எனவே, இத்தகைய எல்லா திருமணங்களையும் புலன் விசாரனை செய்யவேண்டும்" எனக் கூறி இதற்க்கென தனியே ஒரு போலீஸ் படையையும் அமைத்தது குஜராத் அரசு.
மதமாற்றம் செய்வோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் மசோதா ஒண்றை இருப்பினும் இந்த முடிவை அரசு வாபஸ் பெறவில்லை.குஜராத் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வாழும் கிறித்தவர்களையும் முசுலீம்களையும் மட்டும் கணக்கெடுப்பதற்கென்றே தனியாக ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஜனவரி'2000-ல் குஜராத் அரசு அறிவித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது.
கீதாபென்னும் திடீரெனக் கொல்லப்படவுமில்லை.
புதிய கலாச்சாரம் - மே 2002- இதழிலிருந்து
நன்றி : இயல் from http://venmani.blogspot.com
பின்குறிப்பு:
இயல் அக்டோபர் மாத இறுதியில், இதை தன் பதிவில் போட்டிருந்தார். அதை மீண்டும் எடுத்துப் போட்டதற்கு, மூன்று முக்கிய காரணங்கள்.
ஒன்று : குஜராத்தில், தனி பெரும் மெஜரிட்டி பெற்று, மோடி மீண்டும் முதல்வராகியிருக்கிறார். தனது நடவடிக்கைகளாலும், பேச்சினாலும் இட்லரின் வாரிசுகளாக அறியப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் நிறைய உற்சாகமடைந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி மீண்டும் நினைவுப்படுத்த இந்த பதிவு.
இரண்டு : இயல் பதிவாய் போட்டவுடனே, கெட்ட கெட்ட வார்த்தைகளால், ஆர்.எஸ்.எஸ்.
ஆதரவாளர்கள் நிறைய திட்டியிருந்தார்கள். அது எனக்கு நிறைய பிடித்துபோனது.
மூன்று : மோடி வெற்றி பெற்றதுமே, மதுசூதனன் என்ற பதிவர், வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில், மதுசூதனன் இப்படி ஒரு பதில் சொல்லியிருந்தார்.
//என்வரையில் மோடி நல்லவர். ஏனென்றால் பத்து பேருக்கு கெடுதல் செய்தாலும் ஆயிரம் பேருக்கு நல்லது செய்தவர் என்பதையும் இங்கே வாதிடும் யாராலும் மறுக்க முடியாது //
மூவாயிரம் உயிர்களை கொன்று குவித்த மோடி இட்லரின் வாரிசு என்றால், மதுசூதனன் போன்றவர்கள், மோடியின் வாரிசுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்:
மோடி குற்றம் புரிந்தவரே! அந்த அளவுக்கு உண்மை, உலக அளவில் இஸ்லாமியர்கள் தீவிரவாத்தை ஆதரிப்பதும்! எந்த ஓரு தீவிரவாத அமைப்பையும் இந்திய இஸ்லாமிய தலைவர்கள் இதுவரை கண்டித்ததில்லை!
நீங்கள் கண்டித்திருப்பீர்கள் என்று நம்பி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!
muslims are marrying dumb hindu women to multiply their reiligious counts..
Keetha ben didn't die as a hindu she died as a converted muslim..
she was killed by Muslims and hindus
muslims robbed her innocence
hindus killed her for being so dumb..
that is sad...
ஐயா சரி மோடி ஒரு கொலைகாரர் என்றே வைத்துக்கொள்வோம்!!!!!!!
சீக்கியர்களை கொன்று குவித்த காங்கிரஸ், மாஞ்சோலை மக்களை அடித்தே கொன்ற தி.மு.க, நந்திகிராமில் கம்யுனிஸ்ட் என பட்டியல் போட்டால் எல்லா கட்சிகளுமே நாஜிக்கள் தான்!! அவர்கள் மீது நீங்கள் ஏன் பரிவு காட்டுகிறீர்கள், அதே பரிவை இவர்கள் மீது என் உங்களால் காட்டமுடியவில்லை????
கேட்டால் மதசார்ப்பின்மை என்பீர்கள்...இந்த வார்த்தையை சொல்லி விட்டு முஸ்லீம் லீக்குடன் கூட்டு வைப்பீர்கள் மைனோரிட்டி கிறிஸ்துவ மிஷினரிக்களுடன் பேசுவீர்கள் அதையே பா.ஜ.க செய்தால் அது மதவெறி, இந்துத்வா..நன்றாக இருக்கிறது ஐயா உங்கள் மதசார்பின்மை...
what about the coward who ran away leaving his "beloved" wife with a gang of killers?
that alone will tell the muslims's mind set and why they are marrying hindu women
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நல்லவன் தண்டிக்கப் பட்டுவிடக்ககூடாது என்று காந்தி கூறிய (ஒரே) நல்ல வாக்கியம் குறிப்பிட தக்கது
கருத்து சொன்ன எல்லோருக்கும் என் நன்றிகள்.
விரிவான பதிலை விரைவில் சொல்கிறேன்.
Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.
இங்க கழிஞ்சு வைச்சுருக்கிற அரை டவுசர்கள் எவனும் மோடி கொலை செஞ்சத பத்தி கருத்து சொல்ல தயாராயில்லை, மாறாக அவன் செஞ்சான் இவன் செஞ்சான் என்று கூறீ மோடிக்கு புனித வட்டம் கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
அசுரன்
Post a Comment