
பல போராட்டங்களுக்குப் பிறகு, வருகிற 3ந் தேதி ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்களே காண்பிக்கப்படுகிறது. ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாகவும், . அபிராமி, சத்யம், எஸ்கேப்திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக காட்டப்படுகிறது.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிரா அரசும், மத்திய சமூக நீதித்துறையும் இணைந்து அம்பேத்கர் படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.
1999ல் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகு, தொடர்ச்சியாக 2000-ல் இந்தியில் வெளியாகியிருக்கிறது.
2000-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது.
தமிழில் வெளியாக, இத்தனை ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு படம் எத்தனை பேருடைய திருமுகங்களை அம்பலப்படுத்துகிறது.
த.மு.எ.க.ச தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிட முயற்சி எடுக்கப் போகிறதாம். பெரியார் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அம்பேத்கார் படத்திற்கும் கொடுப்பதற்கு அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களை கட்டியமைக்காமல் தானே முயல்வதாக சொல்வது, எந்த அளவிற்கு காரிய சாத்தியம் ஆகப்போகிறது என தெரியவில்லை.
விரிவான செய்திகளுக்கு கீழ்கண்ட சுட்டிகளை வாசியுங்கள்:
அம்பேத்கார் என்ன பாவம் செய்தார்? - உண்மைத் தமிழன் - 28/11/2010
வழக்கறிஞர் சத்யசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கு நன்றி - வே. மதிமாறன் - 29/11/2010
இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்! - மாதவராஜ்
3 பின்னூட்டங்கள்:
நண்பரே!
பகிர்வுக்கு நன்றி.
என வலைப்பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிரேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி வேண்டுகிறேன்.
மாதவராஜ் அவர்களுக்கு, தாங்கள் சொன்னபடி படத்தை இணைத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.
நல்ல பகிர்வு ... வாழ்த்துக்கள்
Post a Comment