December 28, 2011
புயல் ஒன்று பூக்கோலமிட்டது!
இரவு செய்திகளில்
'தானே'
காற்று பலமாய் வீசி
வேரோடு மரங்களை சாய்க்கும்!
அறுவை இயந்திரங்கள்
தயாராயிருக்கின்றன!
மரங்களின் கீழ் ஒதுங்காதீர்கள்!!
என எச்சரித்தார்கள்.
'தானே'
விடிய விடிய மழை பெய்து
பாதைகளை தடை செய்யும்!
நீரை உறிஞ்ச
ஜெனரேட்டர்கள் தயாராய் இருக்கின்றன!
என நம்பிக்கை ஊட்டினார்கள்.
கண்ணில் கவலைகளுடன்
உறங்கிப்போனேன்!
விடிகாலையில் பார்த்தால்
'தானே'
அழகாய் வாசல் தெளித்து
வாசல் மரத்தினை மெல்ல அசைத்து
பூக்களால் கோலமிட்டிருக்கிறது!
நன்றி 'தானே'!
Subscribe to:
Post Comments (Atom)
7 பின்னூட்டங்கள்:
தானே க்கு நன்றி யா ?
தங்களுக்கும் நன்றி .
தோழர்,
’தானே’ இன்னும் வரவே இல்லையே!
அருமை.
அட்டகாசம் !
ஆனால் நாளை புயல் கரை கடக்கும்போது ........ ? !
- இரா.ஜவஹர்,
பத்திரிக்கையாளர்.
- மெயிலில் பெற்றது.
kavithai, kavithai- Super keep it up.
With regards,
A.ommanivannan
- recd. from mail
அழகாக ரசிக்க தெரிந்தவர் சாக்ரடீஸ்!!!
சிவா
- மின்னஞ்சலில் பெற்றது.
வருகை தந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி. இந்த கவிதை நேற்றைய காலை நேர நிலவரம்.
அதற்கு பிறகு, 'தானே' தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை புரட்டிப்ப்போட்டு கொண்டிருக்கிறது.
இதுவரை இருவர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பத்திற்கு இரங்களை தெரிவித்துக்கொள்வோம்.
தோழமையுடன்,
குருத்து
Post a Comment