//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
நேற்று முதலாளிகள் சங்கம் (The Employers' Federation of Southern India (EFSI) முதல்வர் ஜெயலலிதாவிடம் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் உரிமைகளுக்காக போராடும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலைஇலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணியை ஒடுக்க கடிதம் கொடுத்திருக்கிறார்களாம்.
ஜெ. முதலாளிகளின் அழுகாச்சி கடிதத்தை கையில் வாங்கி கொண்டு, "ஆமாம்பா! சமச்சீர் கல்வி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, பேருந்து கட்டண உயர்வு என பல விசயங்களில் எனக்கே குடைச்சல் கொடுத்தார்கள்; கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்" என புலம்புவார் என நினைக்கிறேன்!
தொடர்ந்து சமரசமின்றி போராடும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு நமது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்வோம்!
1 பின்னூட்டங்கள்:
கூகுள் பிளஸ்ல முன்கூட்டியே சிவராமன் சொல்லியிருந்தாரு தோழர்.
Post a Comment