> குருத்து: தில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

December 27, 2012

தில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக...

மாலை : 4.30 மணி அளவில்

அம்பேத்கர் சிலை அருகில்,
பல்லாவரம் பேருந்து நிலையம், சென்னை

அனைவரும் கலந்துகொள்ளுங்கள்!

*****

தில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை!
பாலியல் வெறியர்களை தூக்கில் போடு!

* தனியார்மய - தாராளமய கொள்கை பரப்பும் பாலியல் வக்கிரங்களே
பெண்கள் மீதான தாக்குதல் பெருகுவதற்கு காரணம்!

* பாலியல் வெறியை பரப்பும் சினிமாக்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

* அரசு திட்டமிட்டே பரப்பும் நுகர்வுவெறி,
போதை சீரழிவுகளை வேரறுக்க அணிதிரள்வோம்!

- பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

3 பின்னூட்டங்கள்:

குருத்து said...

மற்ற அமைப்புகள் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதி தருகிற போலீசு, பெண்கள் விடுதலை முன்னணி அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்று திடீரென அனுமதியை மறுத்துவிட்டார்கள். இப்பொழுது அனுமதிக்காக‌ உயர்நீதிமன்ற படி ஏறியிருக்கிறார்கள். இனி நீதிமன்ற அனுமதி பெற்று இரண்டு நாள்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ப.கந்தசாமி said...

இந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் என்ன சாதிக்கப் போகின்றன? அதற்குப் பதிலாக எல்லோரும் உட்கார்ந்து இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று யோசிக்கலாமே?

ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிற மாணவ மாணவிகள் வருட ஆரம்பத்தில் நடத்தும் ரேக்கிங்க் கொடுமைகளை யார் தட்டிக்கேட்பது?

குருத்து said...

//இந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் என்ன சாதிக்கப் போகின்றன? அதற்குப் பதிலாக எல்லோரும் உட்கார்ந்து இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று யோசிக்கலாமே?//

ஆர்ப்பாட்டங்கள் சாதிப்பது - ஒன்று. அரசுக்கு நமது எதிர்ப்பை குறைந்த பட்ட அளவில் பதிவு செய்வது. அரசு முதல் நிலை எதிர்ப்பை கணக்கில் கொள்ளவில்லை என்றால், அடுத்த நிலைக்கு போராட்டங்களை நகர்த்தலாம். இரண்டாவது. மக்களுக்கு நமது அரசியல் நிலைப்பாட்டை புரியவைப்பது. இப்படி புரிந்துகொள்வது மூலம் தான் மக்கள் அமைப்பில் திரள்வார்கள். மக்கள் பலத்தில் தான் நமது கோரிக்கைகளை வலுவாக சொல்லமுடியும். இப்படி நிறைய பலன்கள் இருக்கின்றன.