இந்த மாத உயிர்மையில் எழுத்தாளர் இமையத்தின் ‘சாவுச் சோறு’ சிறுகதை படித்தேன். சாதியத்தின்
கொடூரத்தை விளக்கும் அருமையான சிறுகதை!
நாலுநாட்களாக மொட்டையடித்த 50 வயது உள்ள அம்மா,
பள்ளி, பள்ளியாக ஏறி இறங்குகிறார்.
தாழ்த்தப்பட்ட பையனுடன் போன தன் பெண்ணைத் தேடுகிறார். எம்.எஸ்.சி, எம்.எட் படித்த தன் பெண்ணின்
சான்றிதழ்களையும், அவளுக்காக சேர்த்து வைத்த 8 பவுன் நகைகளையும், கொஞ்சம்
பணத்தையும் அவளிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடவேண்டும் என்று நிம்மதியின்றி
அலைகிறார்!
பெண் போன பிறகு, அந்த பையன் வேலை செய்த கடையை அடித்து
நொறுக்கிவிட்டார்கள். கும்பலாக போய்,
பையனுடைய அம்மாவின் ஒருபக்க முலையை அறுத்தெறிந்துவிட்டார்கள். அந்த அம்மா, அவமானம் தாங்காமல் தூக்கில்
தொங்கிவிட்டார். ‘ஓடிப்போன’ பெண் செத்துப்போனதாய்,
வீட்டில் எல்லா ஈமச்சடங்குகளையும் செய்துமுடித்துவிட்டார்கள். இரண்டு அண்ணன்களும், தந்தையும், அம்மாவையும்
சேர்த்து நால்வரும் மொட்டை போட்டுவிட்டார்கள்.
அவள் கிடைத்தால், அவளின் முலைகளையும் அறுப்பார்கள்.
அவளைப் பார்த்தால், கையில் உள்ளவைகளை தந்து, எங்காவது
போய் பிழைத்துகொள்! ஊர்ப்பக்கம் தப்பித்தவறி வந்துவிடாதே என சொல்வதற்காக தான் நாலு நாட்களாக அந்த தாய்
அலைந்துகொண்டிருக்கிறாள்.
***
4 பின்னூட்டங்கள்:
வணக்கம்
கதைக்கரு நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
சாதியம்
சாதித்துக் கொண்டுதான் இருக்கிறது
சாதிவெறி தாயாக இல்லாமல் இருக்கிறாரே.............
Post a Comment