Showing posts with label இந்துமதவெறி. Show all posts
Showing posts with label இந்துமதவெறி. Show all posts
March 29, 2020
May 2, 2018
லட்டு இனிக்கவேயில்லை!
அது ஒரு தினசரி பத்திரிக்கைகளை அச்சடித்து தரும் நிறுவனம். நிர்வாக மேலாளருடன் பேசிகொண்டிருந்தேன்.
அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் பாக்ஸ் நிறைய லட்டுகளை நீட்டி, மேலாளருக்கு தந்தார். மரியாதை நிமித்தமாய் எனக்கும் தந்தார்.
'என்ன விசேசம்?' என்றேன். "பெண் குழந்தை பிறந்திருக்கிறது!" என்றார் முக மலர்ச்சியுடன்! 'வாழ்த்துக்கள்' என்றேன்.
எட்டு வயது அசீபா நினைவுக்கு வந்தாள். பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பல குழந்தைகள் வரிசையாய் நினைவுக்கு வந்து போனார்கள்.
இனிப்பு தந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இதெல்லாம் அந்த தொழிலாளிக்கு தெரியுமா? தெரிந்தால் என்ன நினைப்பார் என கவலை எழுந்தது!
அந்த லட்டு இறுதிவரை இனிக்கவேயில்லை!
Labels:
இந்துமதவெறி,
சமூகம்,
பண்பாடு,
பொது,
வாழ்க்கை
May 7, 2014
சாவுச் சோறு – இமையம்
இந்த மாத உயிர்மையில் எழுத்தாளர் இமையத்தின் ‘சாவுச் சோறு’ சிறுகதை படித்தேன். சாதியத்தின்
கொடூரத்தை விளக்கும் அருமையான சிறுகதை!
நாலுநாட்களாக மொட்டையடித்த 50 வயது உள்ள அம்மா,
பள்ளி, பள்ளியாக ஏறி இறங்குகிறார்.
தாழ்த்தப்பட்ட பையனுடன் போன தன் பெண்ணைத் தேடுகிறார். எம்.எஸ்.சி, எம்.எட் படித்த தன் பெண்ணின்
சான்றிதழ்களையும், அவளுக்காக சேர்த்து வைத்த 8 பவுன் நகைகளையும், கொஞ்சம்
பணத்தையும் அவளிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடவேண்டும் என்று நிம்மதியின்றி
அலைகிறார்!
பெண் போன பிறகு, அந்த பையன் வேலை செய்த கடையை அடித்து
நொறுக்கிவிட்டார்கள். கும்பலாக போய்,
பையனுடைய அம்மாவின் ஒருபக்க முலையை அறுத்தெறிந்துவிட்டார்கள். அந்த அம்மா, அவமானம் தாங்காமல் தூக்கில்
தொங்கிவிட்டார். ‘ஓடிப்போன’ பெண் செத்துப்போனதாய்,
வீட்டில் எல்லா ஈமச்சடங்குகளையும் செய்துமுடித்துவிட்டார்கள். இரண்டு அண்ணன்களும், தந்தையும், அம்மாவையும்
சேர்த்து நால்வரும் மொட்டை போட்டுவிட்டார்கள்.
அவள் கிடைத்தால், அவளின் முலைகளையும் அறுப்பார்கள்.
அவளைப் பார்த்தால், கையில் உள்ளவைகளை தந்து, எங்காவது
போய் பிழைத்துகொள்! ஊர்ப்பக்கம் தப்பித்தவறி வந்துவிடாதே என சொல்வதற்காக தான் நாலு நாட்களாக அந்த தாய்
அலைந்துகொண்டிருக்கிறாள்.
***
September 26, 2013
இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” - ஆர்ப்பாட்ட செய்திகள்!
”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.
June 21, 2013
ம.க.இ.க குறித்து அவதூறு பிரச்சாரம் : இந்து முன்னணிக்கு கண்டனம்!
இந்துமுன்னணி அமைப்பு எங்களைக் குறித்து அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது, இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று அந்த அமைப்பின் சார்பில் மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச்செயலர் மருதையன் வெளியிட்ட அறிக்கையில்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற எமது அமைப்பு 1980 முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொதுவுடைமைப் பண்பாட்டு அமைப்பாகும். எமது செயல்பாடுகளும் புதிய கலாச்சாரம் என்ற எமது பத்திரிகையும், தமிழக மக்களும் எல்லா அரசியல் இயக்கங்களும் அறிந்தவை. எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சமச்சீர் கல்விக்கான போராட்டத்தையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் அமைப்பு. விவசாயிகள் விடுதலை முன்னணி முல்லைப்பெரியார் போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டிய அமைப்பு.
எமது அமைப்பு சமூக மாற்றத்துக்காகவும் புரட்சிக்காகவும் போராடும் அமைப்பு. நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பற்றிய எமது நிலையை, அரசு ஒடுக்குமுறை பற்றிய எமது கண்டனத்தை எங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதை தமிழகமே அறியும்.
அவ்வாறிருக்கையில் எமது அமைப்பினைப் பற்றிய பொய்களையும், அவதூறுகளையும் இந்து முன்னணி கூறி வருகிறது. அதுவும், நாங்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்பதனால் இத்தகைய அவதூறுகளை இந்து முன்னணி நீண்ட நாட்களாகவே பரப்பி வருகிறது.
1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாங்கள் நடத்திய போது அதற்கு 90 இலட்சம் ரூபாய் பாகிஸ்தானிலிருந்து பணம் வந்தது என்று கூசாமல் பொய் பிரச்சாரம் செய்தது இந்து முன்னணி. பின்னர் சிதம்பரம் கோயிலின் சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் போராட்டத்தை நாங்கள் நடத்திய போதும், அக்கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைத்து அதனை அறநிலையத்துறை ஏற்க வழக்கு தொடுத்தபோதும், எமக்கு எதிர் அணியில் இருந்தது இந்து முன்னணி.
தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள், பிறப்பின் காரணமாக அர்ச்சகராக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் நாங்கள்தான் வழக்காடுகிறோம். இறுதி விசாரணை நிலையில் உள்ள இந்த வழக்கில் மாணவர்களை அச்சுறுத்தி விரட்டும் பல நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று இந்து முன்னணி எங்களைக் குறித்து வெளியிட்ட அவதூறு அறிக்கை என்று சந்தேகிக்கிறோம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- என்று கூறியுள்ளார்.
-தினமணி, 06, June 2013

August 25, 2009
விநாயகர் வருகிறார்!

கொஞ்சம் கொஞ்சமாய்
பகுதிகளில் - சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார்கள்
பெருகி கொண்டிருக்கிறார்கள்.
தொந்தியும் தொப்பையுமாய்
பிள்ளையாருக்கு தம்பியாய்
தூங்கி வழிந்தபடி
ஒரு காவலர் காவல் இருக்கிறார்.
பிள்ளையாருக்கு காவலா?
மக்களுக்கு காவலா?
பிள்ளையாரின் அமைதியான முகம்
ஆண்டுக்கொருமுறை - மெல்ல மெல்ல
ஆக்ரோஷமாய் மாறிக்கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு
இரண்டு புதிய ஆயுதங்கள்
பிள்ளையார் கையில் அதிகரிக்கிறது.
பிள்ளையார் கொட்டகையில்
இரண்டு காவிக்கொடி
பறந்து கொண்டிருக்கிறது.
நேற்றிரவு - கனவில்
பிள்ளையாரின் ஆயுதங்களில்
ரத்தம் வழிந்தது.
எல்லா தெருக்களிலும்
வலம் வர இருக்கிறாராம்!
கவலையாய் இருக்கிறது.
June 2, 2009
மும்பை மாநகரம் பயத்தில் மிதக்கிறது!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், வேலை தொடர்பாய், மும்பைக்கு ஒரு வாரம் சென்றிருந்தேன். இதற்கு முன்பு மும்பைக்கு போன அனுபவமும் இல்லை.
எங்கும் சோதனை! எதிலும் சோதனை!
மும்பையில் எங்கு சென்றாலும் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்த்து பயந்தே போனேன். கேட் வே ஆப் இந்தியா அருகே உள்ள அனைத்து வங்கிகளின் கார்ப்பரேட் அலுவலகங்களிலும், பேருந்து நிலையங்கள், மக்கள் வந்து போகும் பூங்கா, விநாயகர்

கோவில், மகாலெட்சுமி கோவில், ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா கோவில், ரயில் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் மெஷின் கன் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு. ஒவ்வொரு இடத்திற்கும் போகும் பொழுது, நம் உடலை தடவி தடவி பரிசோதிக்கிறார்கள். இங்கே ஒப்புக்கு சோதனை செய்கிறார்களே! அப்படியெல்லாம் இல்லை. போலீஸ் உண்மையிலேயே சோதிக்கிறது. ஆம்! குண்டு வெடித்து வெடித்தால்... அவர்களும் தூக்கியெறியப்படுவார்கள் அல்லவா! உயிர் பயம்.
தேசிய கீதம்
ஒரு மாலை வேளையில் பிரபல திரையரங்கு ஒன்றிக்குப் போனேன். அது பெரிய காம்பளக்ஸ் மால். உள்ளே நுழையும் பொழுதே, அலுவலர்கள் நம்மைச் சோதிக்கிறார்கள். ஆங்காங்கே கடக்கும் பொழுது, நிலைக்கதவு பாதுகாப்பு சோதனை. டிக்கெட் எடுத்து திரையரங்குக்கு நுழையும் பொழுது மீண்டும் சோதனை. ஆண்களின் பர்ஸ், பெண்களின் கைப்பை தவிர திரையரங்கிற்குள் வேறு எதுவும் உள்ளே அனுமதியில்லை.
அறுவை படம். பாதியில் தப்பத்துக்கொள்ளலாம் என நினைத்தால், திரையரங்கை விட்டு நீங்கள் வெளியேற முடியாது. முழுதாய் பார்த்துவிட்டுத்தான் நகல வேண்டும். (ஆமாம். நீங்க பாட்டுக்கு குண்டு வைச்சுட்டு இடைவேளையோடு எந்திரிச்சு போயிட்டிங்கனா! அதுக்கு தான்!)
உங்களுடைய பாதுகாப்புக்காக தான், இவ்வளவு சோதனையும். பலமுறை சோதித்ததற்காக நிர்வாகம் தன்னை மன்னிக்க சொல்லி, திரையில் கார்டு போடுகிறது. படம் போடுவதற்கு முன்பு, தேசிய கீதம் போடுகிறார்கள். எல்லோரும் எழுந்து நிற்க சொல்லி, கார்டும் போடுகிறார்கள். எங்கே எழுந்து நிற்கவில்லையென்றால், “பயங்கரவாதி” என சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில், நானும் நின்றுவிட்டேன்.
தங்குமிடம், சைபர் கபே இடங்களில், நம்முடைய அடையாள அட்டையை நகல் எடுத்து அவர்களே ஒன்றை வைத்துக்கொள்கிறார்கள். எல்லா தகவல்களும் எழுதுகிற ஒரு பெரிய நோட்டை பராமரிக்கிறார்கள்.
“தேர்தல் சமயத்தில் பாதுகாப்பு கொடுக்கமுடியாத காரணங்களுக்காக தான் ஐ.பி.எல். 20/20
கிரிக்கெட் தென்னப்பிரிக்காவில் நடப்பதற்கு காரணம். ஆனால், இப்பொழுது, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைந்திருக்கிறது. ரயில்வே காவலர்களில் பாதி பேரை தேர்தலுக்கு அரசு அனுப்பிவிட்டது” – என பத்திரிக்கைகள் கடுமையான குற்றம் சாட்டின.“அப்படியெல்லாம் இல்லை. ரயில்வே அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்களை தான் நாங்கள் தேர்தல் பணிக்கு அனுப்பியுள்ளோம். முக்கிய நிறுத்தங்களில் எண்ணிக்கையை குறைக்கவில்லை.” என்று பதிலளிக்கிறார் ஒரு ரயில்வே பாதுகாப்பு உயரதிகாரி.
ஏன் இந்த நிலை?
இதுவரை, பலமுறை வெடித்துள்ள குண்டுகளும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களும்,

அதனால் விளைந்த ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் தான் காரணம். இப்படி எங்கும் சோதனை! எதிலும் சோதனை! செய்து, எப்பொழுதும் கவனமாய் இருந்து, தேசியகீதம் பாட்டு போட்டு, வலுக்கட்டாயமாக தேசப்பற்றை ஏற்றி.. இனி குண்டுகள் வெடிப்பதை தவிர்த்துவிட முடியுமா! முடியாது. இந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம், அடிப்படை காரணமான இந்து மதவெறி பயங்கரவாதமும், இதுவரை நடந்த மதவெறி கலவரங்களுக்கு காரணமாயிருந்தவர்கள் தண்டிக்கப்படாதவரை.. இந்த குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாது.
பின்குறிப்பு : இந்த மும்பை பயணத்தில், நான் ஒரு இஸ்லாமியனாய் இருந்து போய் வந்திருந்தால்... இன்னும் அதிகமாக பயமுறுத்தப்பட்டிருப்பேன். இனி போகவே கூடாது என்ற முடிவுக்கும் வந்திருப்பேன்.
Subscribe to:
Comments (Atom)