
மதுரை தினகரன் அலுவலகம் சமீபத்தில் அழகிரியால் தாக்கப்பட்ட பொழுது, என்னிடம் என் அம்மா 'கருணாநிதி குடும்பத்தில், யார்? யார்?' எனக் கேட்ட பொழுது, வரிசைக்கிரமமாக சொல்வதில் நிறைய குழப்பம்.
அந்த பெரிய குடும்பத்தின் சொந்த பந்தங்களை எளிய முறையில் புரியும்படி வரைபடம் போட்டு, இன்றைக்கு என் நண்பர் மெயிலில் அனுப்பி இருந்தார்.
தமிழகத்தையே, இப்பொழுது இந்தியாவையும் ஆட்டி படைக்கும் ஒரு குடும்பம் பற்றி அனைவரும் அறிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் பார்வைக்கும்.
பின்குறிப்பு : இதுபோக இன்னும் இந்த குடும்பத்தில் சில குடும்பங்கள் இருக்கலாம். அதுபற்றி எதும் தகவல்கள் தெரிந்தாலும், தயவு செய்து உலகத்திற்கு சொல்ல வேண்டாம். இருக்கிற வாரிசுகளின் தொல்லையே தாங்க முடியவில்லை.
வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.
2 பின்னூட்டங்கள்:
ஒட்டு மொத்த தமிழகத்தையே வழிநடத்தும் (ஆட்டிப் படைக்கும்) பெரிய குடும்பத்தை வரைந்திருக்கிறீர்கள்!!
இவர்களின் வியாபார மற்றும் உடமைகளின் தொடர்பை படம் வரைவதென்றால், தமிழகம் அளவுக்கு காகிதம் தேவைப்படுமென நினைக்கிறேன்!
நீங்கள் சொல்வது உண்மைதான் நம்பி.
அரசியலையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, இவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே!
அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை உதைக்க மக்கள் எழ வேண்டும்.
எழுவார்கள். அந்த காலமும் விரைவில் வரத்தான் போகிறது.
Post a Comment