
பரமபதமாகி விட்டது
வாழ்க்கை
கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்
கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்
நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்
வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன
மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்
தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன
தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை
3 பின்னூட்டங்கள்:
கவிதை நல்லாயிருக்கு நண்பா.. மனதில் பாரமேற்றுகின்றன வார்த்தைகள்.
பலருக்கும் இன்றைக்கு இது தான் இன்றைய நிலைமை.
நன்றி ஆழியூரான் & அனானிக்கும்.
இந்த கவிதை நம்பிக்கையை விதைக்கிறதா? நம்பிக்கையின்மையை விதைக்கிறதா?
படிக்கிறவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏனெனில், ஒருபோதும் நம்பிக்கையின்மை கவிதைகளை எழுதக்கூடாது. எழுதினாலும் வெளியிடக்கூடாது என்ற கருத்து கொண்டவன் நான்.
Post a Comment