அமெரிக்காவில், சென்ன ஒரே வாரத்தில் ஏழு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில், இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகியுள்ளன். சென்ற 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது (25 வங்கிகள்) இது ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகமாகும்.
நடப்பு டிசம்பர் மாதத்தில், இதுவரையில் 16 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வங்கிகள் திவால் ஆகியுள்ளன.
அமெரிக்காவில், லேமான் பிரதர்ஸ் திவால் ஆன பிறகு, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு விகிதமும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் வங்கிகள் தொடர்ந்து திவால் ஆகிவருவது, சென்ற ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.
நன்றி : தினத்தந்தி - 21/12/2009
December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
எவ்ளோதான் டிரவுசர் கிழிந்து தொங்கினாலும், அமெரிக்க கவலையெல்லாம் அடுத்து யாரு வூட்ட கொள்ளை அடிக்கலாம்னுதான் இருக்கு, அவங்களோட விசுவாசிகள் என்ன நினைக்கிறாங்கன்னே தெரியல. ஒருவேளை இதுவும் புது ஃபேஷனோ?
Post a Comment