புழுதி பறக்கும் தெருக்களில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி விளையாடி திரிகிறான் பீலே!
உள்ளூர் போட்டியில் விளையாடுகிறார்கள். அந்த போட்டியில் தோற்றாலும் 5 கோல்கள் போட்டு கைதட்டல்களை வாங்குகிறான் பீலே.
அப்பா முன்னாள் கால்பந்து விளையாட்டுவீரர். காலில் அடிபட்டதால் இப்பொழுது
மருத்துவமனையில் துப்புரவு வேலை செய்கிறார். வறுமையால் தன்னுடன் வேலை
செய்யும் மகனுக்கு ஓய்வு நேரத்தில் 'ஜிங்கா' ஸ்டைலை கற்றுத் தருகிறார்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, உலகக் கோப்பைக்காக விளையாடும் குழுவில் 16 வயதிலேயே இடம்பெறுகிறான்.
'ஜிங்கா' பிரேசில் நாட்டு பழங்குடி மக்களின் நடனம். அவர்கள் ஒடுக்கப்படும் பொழுது, தங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க கால்பந்து விளையாட்டில் அந்த முறையை புகுத்துகிறார்கள்.
1950ல் உலக கோப்பையில் தோற்றதற்கு காரணம் ஜிங்கா ஸ்டைல்தான் என்ற பழி இருப்பதால் அந்த முறையை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கிறார்கள்.
பல்வேறு போராட்டங்கள். ஜிங்காவை அனுமதித்தார்களா உலகக் கோப்பையை வென்றார்களா என்பது முழு நீள கதை!
*****
விளையாட்டு எப்பொழுதும் விளையாட்டாக இருந்ததில்லை என்பது மற்றும் நன்றாக உணர முடிகிறது. பயிற்சியாளர் விளையாட்டு வீரர்கள் உள்பட அத்தனை பேருக்கும் அத்தனை மனஅழுத்தம்!
பயிற்சியாளரே தன் குழுவின் பலம் எதில் இருக்கிறது என உணர்ந்து இறுதியில் பேசுவது அருமையான இடம்.
படத்தில் நடித்த அத்தனை பேரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார் நன்றாக இருக்கிறது.
'எதை செய்தாலும் ஈடுபாட்டோடு செய்' என்கிறார் பீலே அப்பா. என்னுடன் படம் பார்த்த என் பெண்ணுக்கும் அதையேதான் அழுத்தமாக சொன்னேன்.
பார்க்க வேண்டிய படம்.
தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.