கடந்த வாரம் எங்கள் பகுதியில் ஒரு செருப்பு வாங்கப் போனேன். பணத்தை அனுப்பும்பொழுது, GPay மூலமாக அனுப்பப் பார்த்தேன். Payment failed என வந்துவிட்டது. வங்கியிலிருந்து பணம் போனதற்கான குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை. ஆகையால் என் வங்கி டெபிட் அட்டையைக் கொடுத்து, பணத்தைச் செலுத்திவிட்டு வந்து விட்டேன்.
இன்று காலையில் வங்கிக் கணக்கைச் சோதிக்கும் பொழுது, Gpay யும் அவருக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள கடை என்பதால், நேரில் போய்க் கேட்டால், ”வங்கிக் கணக்கைச் சரி பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்றார். பிறகு, மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டு, சோதித்துவிட்டு, ”எனக்கு ஒருமுறை தான் பணம் வந்துள்ளது” எனச் சொல்லிவிட்டார்.
இப்பொழுது Gpay வாடிக்கையாளர் மையத்துக்கு போன் செய்தால், ”உங்கள் வங்கியிடம் போய்ப் புகார் அளியுங்கள். இல்லையெனில், அடுத்தடுத்து, இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. அங்கு போய்ப் புகார் அளியுங்கள்” என்கிறார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ”Payment failed என குறுஞ்செய்தி வந்த பிறகு தான், நான் பணம் செலுத்தினேன். அதற்குப் பிறகு ஏன் நீங்கள் பணத்தைச் செலுத்தினீர்கள். இனி இந்தப் பிரச்சனை தீருகிற வரை Gpay யை பயன்படுத்த பெரிய தயக்கம் வந்துவிடுகிறது. நான் சொல்வது சரியா? தவறா? சொல்லுங்கள்” எனக் கேட்டால், “நீங்கள் சொல்வது சரி தான். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” எனச் சொல்கிறார்.
இனி வங்கிக்குப் போய், கேட்டு… எப்ப அந்தப் பணம் வரப் போகுதுன்னு தெரியல! சோகம்.
ஏற்கனவே ரூ. 3000க்கு மேலே பெரிய பணமாக இருந்தால், ஜி பேயில் அனுப்பக்கூடாதுன்னு முடிவுல இருக்கிறேன். (அவ்வளவு தான் நமக்குக் கட்டுப்படியாகும்!) இப்ப இந்தப் பிரச்சனை வேற!
நீங்கள் இந்தப் பிரச்சனையை எதிர் கொண்டிருக்கிறீர்களா? அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment