எப்பொழுதும்
செய்வதற்கு
சிறிய
நடுத்தர
பெரிய
நூறு
முக்கிய வேலைகள்
காத்திருக்கின்றன.
"இந்த வேலையை உடனே செய்" என
மண்டைக்குள் அசரீரி ஒலிக்கிறது.
எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு..
பிடித்தப்படம் ஒன்றைப் பார்க்கிறேன்.
பிடித்தப் புத்தகம்
ஒன்றை வாசிக்கிறேன்.
சில சமயங்களில்
அபத்தமாய் ரீல்ஸ்
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment