எங்களது வரி ஆலோசகர்கள் குழுவில் திருமதி செல்வராணியும் ஒருவர். அவர் செங்குன்றம் அருகே புதிதாய் வீடு கட்டியுள்ளதாகவும், வாருங்கள் எனவும் அன்புடன் அழைத்தார்.
இலக்கியாவோடு போயிருந்தேன். வீடு பெரிதாகவும், சூரிய வெளிச்சம் நன்றாக படும்படியும், காற்றோட்டமாகவும் இருந்தது. முகப்பேரில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இப்படி ஒரு வீடு எத்தனை மகிழ்ச்சி தரும் என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாதது.
இங்கு எல்லோருக்கும் வீடு வேண்டும். அது ஒரு கனவாகவே பலருக்கும் இருக்கிறது. யாரேனும் வீடு கட்டினால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெரிய வீடு என சொல்லும்பொழுது, திருமதி செல்வராணியின் கணவர் வங்கி மேலாளர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. இப்படி பெரிய வீடு அவர் கட்டினால் தான்… வாடிக்கையாளர்களாகிய நம்மை போன்றவர்கள் கடன் பெற்று வீடு கட்டமுடியும். 

வாழ்த்தும் பொழுது… சொன்னார். “உங்களுடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறீர்கள்” என வாழ்த்து தெரிவித்தார்.
இத்தனை ஆண்டுகள் பேஸ்புக்கில் எழுதி வந்ததில்… நேரடி அறிமுகம் இல்லாத ஒருவர் இப்படி சொன்னதில் மகிழ்ச்சி.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment