> குருத்து: மன்னிப்பு கேட்கவேண்டும்!

November 20, 2011

மன்னிப்பு கேட்கவேண்டும்!


பால், மின்சார கட்டணம், பேருந்து கட்டண உயர்வு குறித்து எழுதும் பொழுது,

"மக்களின் மீது சுமையை ஏற்றலாம். பாறாங்கல்லை வைத்தால், செத்துவிடுவார்கள்" என தினமணி வைத்தியநாதன் எழுதுகிறார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுகிற உத்தரவு குறித்து, எழுதும் பொழுது,

"திருவள்ளுவர் சிலையை தூக்கிவிட்டு, அம்மாவின் சிலையை அங்கு வைப்பதாய் கார்ட்டூன் படம் போடுகிறது" ஆனந்தவிகடன்.

இராஜூவ் காந்தி வழக்கில், மூவர் தூக்கு குறித்து, நீதிமன்றத்தில் பதில் தாக்கல் "அரசுக்கு ஒன்றும் கருத்தில்லை. நீங்கள் தூக்கை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என கூறிய பொழுது, தமிழ் அமைப்புகள் எல்லாம் புலம்பி தீர்த்தார்கள்.

அம்மா திருந்திவிட்டார் என தேர்தல் சமயங்களில் மாய்ந்து, மாய்ந்து எழுதி தீர்த்த, மேடைகள் தோறும் பேசி திரிந்த எல்லோரும் "ஜெ. திருந்தவில்லை. இன்னும் மக்கள் விரோத தனம் கூடியிருக்கிறது" என ஒழுங்கு மரியாதையா மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டும் என நாம் அனைவரும் கோரவேண்டும்

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

மேடைகள் பேசி,எழுதியவர்கள் பகல்வேஷக்காரர்கள்.தின்னை பேச்சுக்காரர்கள் முட்டாளுக்கு கீழானவர்கள்