> குருத்து: வாஜ்பேயி சுதந்திர போராட்ட தியாகியா?

November 30, 2012

வாஜ்பேயி சுதந்திர போராட்ட தியாகியா?

//குஜ்ராலின் மறைவு இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கடைசி தேசியத் தலைவர் ஐ.கே. குஜ்ராலாகத்தான் இருப்பார். //

குஜராலின் மறைவை ஒட்டி, தினமணி வைத்தியநாதன் இன்றைய தினமணியில் தலையங்கத்தில் மேற்படி எழுதியிருக்கிறார். இப்படி எழுதியதன் மூலம் வாஜ்பேயி "சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்" என்ற ஆர்.எஸ்.எஸ். அம்பிகளின் பொய்யை வைத்தியநாதன் மறுக்கிறார். ஒருவேளை வாஜ்பேயி செத்துப்போய்விட்டாரோ என தேடிப்பார்த்தேன். உயிருடன் தான் இருக்கிறார்.


வரலாறு என்னவென்றால், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்த சமயத்தில், ஒரு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கொடியை ஏற்றினார்கள். இந்த விசயம் கேள்விப்பட்டு பிரிட்டிஷ் காவல்துறை சுற்றி வளைத்த பொழுது, வாஜ்பேயி கைதானார். அதுவரை சரி! அதற்கு பிறகு தான் டிவிஸ்ட். "கொடி ஏற்றியவர்களை காட்டிக்கொடு! உன்னை விட்டுவிடுகிறோம்" என்றதும், காட்டிக்கொடுத்துவிட்டு, பாதுகாப்பாய் வீட்டுக்கு போனவர் தான் இந்த வாஜ்பேயி.


இது வரலாறு. சில வருடங்களுக்கு முன்பு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வாஜ்பேய்க்கு சுதந்திர போராட்ட தியாகி என பில்டப் கொடுத்து பேசினார்கள். அப்பொழுது தான் வாஜ்பேயின் துரோக வரலாறு வெளியே வந்தது!

3 பின்னூட்டங்கள்:

எருமை said...

இந்து முண்ணனி இராம கோபாலனுக்கும் விடுதலை போராட்ட தியாகின்னு பட்டம் கொடுத்தாலும் கொடுப்பாங்கே

உதயம் said...

//வரலாறு என்னவென்றால், 'இந்தியனே வெளியேறு' போராட்டம் நடந்த சமயத்தில், ஒரு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கொடியை ஏற்றினார்கள்.//

ஒரு திருத்தம் சகோதரரே.. வெள்ளையனே வெளியேறு என்று வந்திருக்க வேண்டும்.

குருத்து said...

உதயம்,

பிழையை திருத்தியதற்கு மிக்க நன்றி.