”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.