ஜி.எஸ்.டி குறித்த ஒரு அறிமுக வகுப்பு மாணவர்களுக்காகவும், தொழிலாக செய்யும் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும் பத்து நாட்கள் வகுப்பு திட்டமிடப்பட்டது.
பொதுவாக ஆங்கிலத்தில்
பல வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழில்
நடத்தப்படும் மாணவர்கள் குறைவு. ஆகையால் அவர்களுக்கு கவனம் கொடுக்கலாம் என தமிழில்
வகுப்பு எடுக்க அதன் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். அதையே தெரிவிக்கவும் செய்தார்கள். பிற மாநிலங்களில்
இருந்து விசாரிக்கும் பொழுது, தமிழில் கவனம் கொடுக்கிறோம் என தெரிவித்து அவர்களை தவிர்த்தும்விட்டார்கள்.
கடந்த இரண்டு
நாள்கள் வகுப்பில் தமிழில் பிபிடி தயாரித்து, தமிழில் விளக்க ஆரம்பித்ததும், ஆங்கிலத்தில் எடுங்கள் என சிலர் கேட்க ஆரம்பித்தார்கள். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழில் எடுப்பது தான் திட்டம். அதற்கு தான் கவனம் கொடுக்கிறோம் என விளக்கம் கொடுத்தாலும்…
மீண்டும் மீண்டும் எங்களுக்கு புரியவில்லை என சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள்.
தமிழில் எடுக்க
விரும்புவர்கள் வகுப்பில் ஒன்றிரண்டு பேர் தமிழிலேயே எடுங்கள் என அவர்களும் சொல்ல ஆரம்பித்தார்கள்.
தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தமிழிலேயே எடுங்கள்
என கேட்டும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வகுப்பு
நடக்கும் பொழுது மாறி மாறி இப்படிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க..
இரண்டாவது நாள், மூன்றாவது நாளில் இப்பொழுது என்ன நடைமுறைக்கு வந்து இருக்கிறது என்றால்…
பிபிடியை ஆங்கிலத்தில் கொடுப்பது! தமிலிங்கிஷில் விளக்குவது என முடிவு எதுவும் எடுக்காமலேயே அமுலுக்கு வந்திருக்கிறது.
இது ஒரு சமூக
பிரச்சனை. ஆங்கில வழியில் படிக்கும் பெரும்பாலானவர்களுக்கு
ஆங்கிலமும் தெரியவில்லை. தாய்மொழியான தமிழும் தெரியவில்லை. அவர்களுக்கு இயல்பான தமிழ்
வார்த்தைகள் கூட அவர்களுக்கு பரிச்சயமாக இருக்கவில்லை. நாம் தமிழில் ஏதாவது சொன்னால்…
நம்மைப் பார்த்து வியந்து… தூய தமிழில் பேசுகிறீர்கள் என்கிறார்கள்.
ஜம்ப் - ஆங்கிலம்
ஜம்ப் பண்ணு - தமிழ்
சென்டர் - ஆங்கிலம்
நடு சென்டர் - தமிழ்
கேட்ச் - ஆங்கிலம்
கேட்ச் புடி - தமிழ்
டேமில் - ஆங்கிலம்
தமில் - தமிழ்
டிச் - ஆங்கிலம்
டிச்சுக் குழி - தமிழ்
# முப்பது நொடிகளில் ஆங்கிலம்
என ஷான் கருப்புசாமி
இன்று ஒரு பதிவைப் போட்டிருந்தார்.
யதார்த்தம் இதுவாக தான் இருக்கிறது. :(
0 பின்னூட்டங்கள்:
Post a Comment