> குருத்து: March 2026

March 30, 2026

One Piece Monkey D Luffy - தலைவன்


ஒன் பீஸை (பெரும் புதையல்) தேடுவது தான் லட்சியம். அவனுடைய இயல்பு கொஞ்சம் லூசு போல தெரிந்தாலும், தலைமைப் பண்புகளோடு இருக்கிறது. அவனுடைய தலைமையை யாரும் துவக்கத்தில் ஏற்பதில்லை. ஆனால் அவனுடைய நம்பிக்கைகுரிய செயல்பாடுகளால், அவன் தலைமையை ஏற்கிறார்கள். குழுவாகிறார்கள்.

 

எனக்கு கடந்த இரண்டு சீசன்களாகத் தான் லுபியை தெரியும். சாட் ஜிபிடி நிறைய தெரிந்து வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் அதனிடம் கேட்டால், தொகுத்து சொல்லியிருக்கிறது. படித்துப் பாருங்கள். லுபியை உங்களுக்கும் பிடித்துப் போகலாம்.

 

****

 

One Piece தொடரில் Monkey D. Luffy ஒரு சாதாரண ஹீரோவாக அல்ல, இயல்பாகவே உருவாகும் தலைவராக காட்டப்படுகிறார். இதுஅதிகாரம்மூலம் அல்ல; “நம்பிக்கை + செயல்கள்மூலம் உருவான தலைமை.

அவரை ஒரு தலைவனாக மாற்றும் முக்கிய அம்சங்கள் கீழே:

 

1. தெளிவான இலக்கு (Clear Vision)

 

லுபியின் ஒரே குறிக்கோள் — Pirate King ஆக வேண்டும்.
இது வெறும் ஆசை அல்ல; எந்த சூழ்நிலையிலும் மாறாத உறுதி.

 

தலைமைப் பார்வை:


ஒரு தலைவருக்கு தன்னுடைய திசை தெளிவாக இருக்க வேண்டும். லுபி அதில் ஒருபோதும் குழம்புவதில்லை.

 

2. மனிதர்களை நம்பும் திறன் (Trust in Team)

 

அவர் குழுவினரைகீழ்நிலையினர்என்று பார்க்கவில்லை.
ஒவ்வொருவரையும் முழுமையாக நம்புகிறார் (Zoro, Nami, Sanji…).

 

உதாரணம்:

ஒரு விஷயத்தில் தானே தெரியாவிட்டால், அதை அந்த உறுப்பினரிடம் விட்டுவிடுகிறார்.

 

தலைமைப் பார்வை:

Micromanagement இல்லாமல், பொறுப்பை பகிரும் திறன்.

 

3. முன் நின்று போராடும் மனப்பாங்கு (Lead from the Front)

 

எந்த அபாயமான சூழ்நிலையிலும் முதலில் குதிப்பவர் லுபி தான்.

 

தலைமைப் பார்வை:

பாதுகாப்பான இடத்தில் இருந்து கட்டளை கொடுப்பவர் அல்ல;
முன்னிலையில் இருந்து செயல் காட்டும் தலைவர்.

 

4. நண்பர்களுக்காக எல்லாம் தியாகம் செய்யும் தன்மை (Sacrifice)

 

அவருடைய குழுவினருக்காக உயிரையே பணயம் வைக்க தயார்.

உதாரணம்:

Enies Lobby, Marineford போன்ற இடங்களில் அவர் எடுத்த முடிவுகள்.


தலைமைப் பார்வை:

“People-first” அணுகுமுறைகுழுவின் நலன் முதன்மை.

 

5. எளிமையான சிந்தனை (Simple but Strong Thinking)

 

லுபி சிக்கலான திட்டங்களை அதிகம் யோசிப்பதில்லைஆனால் அவர் முடிவுகள் நேரடியானவை, மனசாட்சியுடன் கூடியவை.

 

தலைமைப் பார்வை:

சில நேரங்களில் அதிக பகுத்தறிவு அல்ல; தெளிவான நியாய உணர்வு தான் முக்கியம்.

 

6. பயமின்மை (Fearlessness)

 

அவர் யாரையும் பார்த்து பயப்படுவதில்லை — Shichibukai, Yonko, World Government என எதுவாக இருந்தாலும்.


தலைமைப் பார்வை:

அதிகாரத்தை விட, நியாயத்தை முன்னிலைப்படுத்தும் துணிவு.

 

7. மக்களை ஈர்க்கும் இயல்பு (Natural Influence)

 

லுபி யாரையும் force செய்து தன்னுடன் சேர வைப்பதில்லை. ஆனால் அவரை பார்த்து மக்கள் தானாகவே சேர்கிறார்கள்.


தலைமைப் பார்வை:  Influence என்பது பதவி மூலம் அல்ல; தனிப்பட்ட குணாதிசயங்களால் உருவாகும்.

 

8. தோல்விக்குப் பிறகும் எழும் மனவலம் (Resilience)

 

அவர் பல முறை தோல்வி அடைகிறார். ஆனால் ஒவ்வொரு முறை மேலும் வலிமையாக திரும்பி வருகிறார்.


தலைமைப் பார்வை

தோல்வி = முடிவு அல்ல; மேம்பாட்டிற்கான நிலை.

 

சிறிய கருத்து (துறை சார்ந்த பார்வை)

 

ஒரு தொழில்முறை உலகில், லுபியின் தலைமை பாணி “Control-based leadership” அல்ல;   “Trust-based leadership”.

 

இறுதியாக...

லுபி ஒருபதவி பெற்ற தலைவர்அல்ல. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொள்வதால் தான் அவர் தலைவர்.

 

அதுவே உண்மையான தலைமைஅதிகாரம் இல்லாமலே வழிநடத்தும் திறன்.

March 22, 2026

The Young Sherlock (2026) அருமையான துப்பறியும் தொலைக்காட்சி தொடர்


மாணவ பருவத்தில் ஷெர்லாக். ”களவையும் கற்று மற” என்பதின் படி, பர்சை திருடி, அவர்களிடமே திரும்ப வைக்கும் பொழுதோ, கொடுக்கும் பொழுதே மாட்டிக்கொள்கிறார்.  சிறைத் தண்டனை கிடைக்கிறது.

 

அரசு பதவியில் இருக்கும் உடன் பிறந்த அண்ணன், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறையில் இருந்து விடுவதித்து ஷெர்லாக்கை படிக்க வைக்கிறேன் என நைசாக அழைத்துப் போய் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் வேலை செய்ய வைக்கிறார்.

 

அவருடைய ஆர்வத்தில் வேலை செய்துகொண்டே கற்றும்கொள்கிறார். அங்கு ஒரு மதிப்புமிக்க பொருள் திருடு போகிறது. ஏற்கனவே திருடன் பட்டம் இருக்கும் ஷெர்லாக் மீது பழி விழிகிறது.  அங்கு படிக்கும் (பின்னாளில் புத்திசாலி எதிரியான) மோரியாரிட்டி அவருக்கு பலவிதத்தில் உதவுகிறான். அங்கிருக்கும் பேராசிரியர்கள் ஒவ்வொருவராக கொலைச்செய்யப்படுகிறார்கள்.

 

இந்த கொலைகள் ஏன் என தொட்டுத் தொட்டு துப்பறிந்து, மல்லுக்கட்டி,  அது மனித உயிரைக் கொல்லும் ஒரு பெரிய வணிகத்தின் பின்னால் போய் நிற்கிறது.  அதில் ஷெர்லாக் குடும்பத்திற்குள்ளேயே ஒரு வில்லன் இருக்கிறான்.

 

பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***

ஷெர்லாக் குறித்து  Arthur Conan Doyle எழுதியது 4 நாவல்கள். 58 சிறுகதைகள் கதைகள். (இன்னும் சில ஒரிஜினல்கள் என வாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.) அதன் பிறகு எடுக்கப்பட்ட படங்கள், சீரிஸ்கள், தொலைக்காட்சி படங்கள் நிறைய.   ஷெர்லாக் பாத்திரத்தின் தாக்கத்தில் உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காது.  இதில் தமிழில் மிஷ்கினின் துப்பறிவாளன் உட்பட அடங்கும்.

 

மாணவப் பருவ ஷெர்லாக் கதைகள் இதுவரை படமாக இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த தொலைக்காட்சி சீரிஸ் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் துவங்கும் கொலைகள், பிறகு யூடர்ன் அடித்து, ஷெர்லாக்கின் சொந்த குடும்பத்திற்குள் ஏகப்பட்ட டிராமாக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

ஷெர்லாக்கின் மாணவ பருவத்தில் இருக்கும் துப்பறியும் அறிவு, மற்றவர்களும் அதற்கு உதவுவது எல்லாம் நன்றாக இருக்கிறது

 

மேலோட்டமாக எடுக்காமல், கொஞ்சம் மெனக்கெட்டு, துவக்கத்தில் இருந்து, கடைசி வரை விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள்.   எல்லா பாத்திரங்களும் நினைவில் நிற்பது இதன் பலம். நடிகர்களும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

பிரைமில் தமிழில் இருக்கிறது. துப்பறிதல் + ஆக்சன் படங்களில் ஆர்வம் உள்ள ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம். தவற விடாதீர்கள்.

War machine (2026) அதிரடி ஆக்சன் படம்


நாயகன் அமெரிக்காவின் போர்க்களத்தில் வண்டிகளை பழுதுப் பார்ப்பவராக இருக்கிறார்.  நாயகனின் தம்பியும் இராணுவத்தில் பணிபுரிகிறார்.  இராணுவத்தின் மிகவும் சிறப்பு பிரிவான, கடுமையான பயிற்சிகளை கொண்ட ரேஞ்சர் தகுதிக்கு, அண்ணனுடன், கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறார்.

 

ஆப்கானில் தம்பி கொல்லப்பட, தம்பியின் ஆசையை நிறைவேற்ற ரேஞ்சர் பிரிவில் பெயரை கொடுக்கிறார்.   மெல்ல மெல்ல இறுதி கட்டத் தேர்விற்கு முன்னேறுகிறார்.

 

தேர்ந்தெடுத்த அந்தக் குழு டம்மி துப்பாக்கிகளுடன்  ஒரு காட்டுப் பகுதிக்கு ஒரு பயிற்சிக்கு இறக்கிவிடப்பட, எதைச்சையாக வேற்று கிரகத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நவீன ஆயுதங்கள் கொண்ட ஒரு எந்திர மிஷினை எதிர்கொள்கிறார்கள்.

 

மொத்தக் குழுவும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை இறுதி வரை பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

 

***


1987ல்  அர்னால்டு நடித்த பிரிடேட்டர்  படம் அதிரடி படங்களில் மறக்க முடியாத படம். அதே கதையைத் தான் வேறு ஒரு களத்தைச் சொல்லி எடுத்திருக்கிறார்கள்.  ஆனால் அதன் உயரத்தை தொடமுடியவில்லை என்பது தான் எதார்த்தம்.  கடைசிக் காட்சி இன்னும் சுத்தம்.  எடுபடவில்லை.

 

இருப்பினும் துவக்கத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் குழு வெற்றி பெற்றிருக்கிறது.

 

Reacher சீரிசில் வரும் Alan Michael Ritchson தான் நாயகன்.  மொத்தப் படத்தையும் அவர் தான் தன் உணர்ச்சியில், உடலால் தாங்கியிருக்கிறார். குழுவில் உள்ள ஆட்களையும் இன்னும் பிரதானப்படுத்தியிருக்கலாம். இதனால் அவர்கள் இறக்கும் பொழுது, பத்தோடு, பதினொன்றாக இறந்து போகிறார்கள்.

 

நெட் பிளிக்சில் தமிழில் இருக்கிறது. ஆக்சன் பிரியர்கள் மட்டும் தாராளமாய் பார்க்கலாம்.

March 15, 2026

Paathirathri 2025 மலையாளம் புலனாய்வு படம்

 


நாயகி ஒரு SI போலீசு அதிகாரி. கணவனுடான உறவு சிக்கலில் இருக்கிறது.   ஒரு போலீசுகாரர். அவருடைய விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.

 

இருவரும் இடுக்கி மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். ஒருநாள் இரவு ரோந்து பணிக்கு இருவரும் கிளம்புகிறார்கள்.  ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கார் தன்னந்தனியாக நிற்கிறது. இவர்கள் அருகே போகும் பொழுது, அந்த காரிலிருந்து ஒரு ஆண் உருவம் தெறித்து ஓடுகிறது.  காரும் வேகமாக நகர்ந்துவிடுகிறது.

 

இருவரும் அந்த உருவத்தைத் துரத்தி போகும் பொழுது,  ஒரு மண் கலந்த குட்டையில் விழுந்துவிடுகிறது.  இடையே ஒரு தீப்பிடித்து எறிந்த வழக்கை கையாள அழைப்பு வரும் பொழுது, அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். அதிகாரி தெரிவிப்போம் என சொல்ல, டிரைவர் போலீசோ  நாம் துரத்தி வந்ததையோ, அந்த ஆள் விழுந்ததையோ யாருமே பார்க்கவில்லை. வாருங்கள் கிளம்பலாம் என கூட்டி கிளம்பிவிடுகிறார்.

 

அடுத்த நாள் அந்த இடத்தில் வந்து பார்த்தால்,  மண்ணைப் போட்டு மூடிக்கொண்டிருக்கிறார்கள்.  பிறகு உடல் தட்டுப்படுகிறது. அவர் ஒரு பத்திரிக்கையாளர் எனவும், அவர் மனைவி புகார் கொடுக்கவும் விசயம் பெரிதாகிறது.

 

இருவரும் முறையாக தெரிவிக்காததால், இவர்கள் மீதே அந்த கொலை வழக்கு திரும்புகிறது.  தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.  உண்மையில் நடந்தது என்ன? என்பதை மெல்ல மெல்ல விசாரணையில் தெரிய வரும் பொழுது, ஆச்சர்யப்படுகிறோம்.

 

***

 

Shaji Maraad போலீசாக இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.  அவருடைய பங்களிப்பில் இள வீழ பூஞ்சிறா (2022) வெளிவந்து புகழ்பெற்றது.  அதன் தொடர்ச்சியில் இந்த கதையையும் அவர் எழுதியிருக்கிறார்.

 

படத்திலும் இயல்பில் உள்ள கதை அம்சம் என அது நன்றாக தெரிகிறது.  என்ன நடந்தது என்பதை கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருந்து சொல்லியிருக்கிறார்கள். சிறப்பு.

 

முன்பெல்லாம் நாயகன், நாயகியைப் பற்றிய குடும்பங்கள் எல்லாம் ”நல்ல” விதமாய் காட்டுவார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெப் சீரிஸ்களில், சில படங்களில் அவர்களின் குடும்பங்கள் சிதைவு கொண்டதாக தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது.  இது பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய படங்களில் அப்படி நிறைய பார்க்கமுடியும்.  இங்கேயும் குடும்பங்களின் சிதைவு காரணமாக இப்படி காண்பிக்கிறார்களா? அல்லது மேலை நாட்டு படங்களின் தாக்கமா என தெரியவில்லை.

 

இந்த படம் உண்மை சம்பவங்களின் தாக்கம் என சொல்லும் பொழுது, அதிலும் குடும்பங்கள் சிதைவு குறித்து காண்பிக்கும் பொழுது, இயல்பில் உள்ளதை காண்பிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

 

Shaji Maraad எழுதும் கதைகளில் எல்லாம், போலீசு துறையில் அப்பாவிகள் எளிதாக பலிகடா ஆக்கப்படுவார்கள் என்பதை நினைக்கும் பொழுது ஒரு துறையில் பணிச்சூழலில் அவ்வபொழுது ஒரு திணறல் (suffocation) இருக்கும். எப்பொழுதுமே இப்படி இருக்கும் துறை இது போல! சிரமம் தான்.

 

நாயகியாக அழகிய தீயே நவ்யா நடித்திருக்கிறார். Soubin Shahir  போலீசாக வந்தாலும், அவர் தான் கதையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.  இயக்குநர் Ratheena  இயக்கியுள்ளார்.

 

புலனாய்வு கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் பார்க்கலாம். Zee5ல் வெளிவந்திருக்கிறது. ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தேன்.

 

Bluff (2026) அதிரடி ஆக்சன் கதை

 

ஒரு கடலோர கிராமம். நாயகி தன் கணவன், மகன், கணவனின் தங்கை என அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள். 

 

கடல் பயணத்திற்கு சென்ற நாயகியின் கணவன் கொடூரமான கடற்கரை கொள்ளையர்கள் குழுவிடம் சிக்குகிறான்.  அவனிடம் இருந்த தங்க கட்டியைப் பார்த்து, அது ஒரு பெரிய பொக்கிசத்தின் ஒரு பகுதி என வில்லன் அறிகிறான்.

 

அவனையும் இழுத்துக்கொண்
டு, அந்த கடலோர கிராமத்தை வந்தடைகிறார்கள்.  அங்கிருப்பவர்களை எல்லாம் கொடூரமாக கொல்கிறார்கள். 

 

நாயகி அந்த கடற்கொள்ளையர்களில் ஒருவராக இருந்து, இப்பொழுது மனந்திருந்தி  வாழ்பவள்.  ஆனால் பழைய பகை அவளைத் தேடி வந்திருக்கிறது.

 

அவர்களிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றினாளா என்பது முழு நீள ஆக்சன் கதை.

****

 

ரஜினி நடித்த பாட்சா கதை தான்.  இதில் புதுசு என்னவென்றல இந்த ஆங்கிலப்படத்தில், பிரியா சோப்ரா நடித்திருத்திருக்கிறார்.  ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்தார் என நினைவுக்கு வருகிறது.

 

எளிய கதை தான்.  பிரியங்கா சோப்ராவும், Boys சீரிசில் அதிகாரியாக ”சூப்பர் நாயகர்களுடன் மல்லுக்கட்டும் Karl Heinz urban தான் வில்லனும் என இருவரும் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள்.

 

படம் ஆஹோ ஓஹோ என இல்லை. வழக்கமான ஒரு ஆக்சன் படம் தான்.

 

அமேசானில் தமிழில் இருக்கிறது. ஆக்சன் ரசிகர்கள், நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள்.