January 31, 2012
கூடங்குளம் - அணுஉலை போராட்டக்குழுவினர் மீது தாக்குதல்!
இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து நடுவண் குழுவுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் இடிந்தகரையைச் சேர்ந்த 50-க்கு மேற்பட பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். அப்பொழுது அங்கிருந்த இந்து முன்னணி காலிகள் மற்றும் காங்கிரசு காலிகள் தாக்குதல் நடத்தினர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாக்குதலை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். தாக்குதலை கண்டித்து, கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மக்கள் போராட்டங்களை துவங்கியுள்ளனர். வியாபாரிகள் கடை அடைத்துள்ளார்கள். மீனவர்களும் போராடத்துவங்கியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு" என மக்கள் தொடர்ந்து ஐந்து மாதத்திற்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆதரவை தரவேண்டியது நமது கடமை.
ஆகையால், தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவரும் கண்டனங்களை பதிவு செய்வோம்!
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
நீங்களே இந்த வன்முறை நாடகத்தை நடத்தவில்லை என்ன ஆதாரம் இருக்கிறது . உங்களின் போலி முகமூடிகள் கிழியும் நேரம் வந்துவிட்டது . தேச துரோகிகளை அடையாளம் காண்போம் . தேசத்தை காப்போம் .
அனானி அவர்களே!
செய்திகளை கவனமாக படித்துப் பார்க்காமல், கருத்தை அவசரமாக வெளியிடாதீர்கள். "தேசத்துரோகிகளோடு என்ன பேச்சுவார்த்தை" என்று சொல்லித்தான் இந்து முன்னணியினரும், காங்கிரசாரும் மாவட்ட ஆட்சியர், பேச்சுவார்த்தை குழுவுக்கு முன்பு தாக்கியிருக்கிறார்கள்.
யார் தேசத்தை பாதுகாக்கிறவர்கள்? யார் தேசத்திற்கு துரோகம் செய்வது என பல நடவடிக்கைகளில் மக்கள் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.
திரு,. உதயகுமார் அவர்கள் பேசும் போது மத உணர்சிகளை தூண்டும் விதத்தில் ( சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ) என்று பேசியுள்ளாரே , இது உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா ... நண்பரே
இருதயம் அவர்களே!
அவர் என்ன சொன்னார் என இணைப்பு தரமுடியுமா! படித்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன்
நன்றி.
சன் TV ல் பெட்டி கொடுக்கும் போது சொன்னார் , " சிறுபான்மை மக்ககளுக்கு பாதுகாப்பு இல்லாததால் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் " என்று . இது வலைத்தளத்தில் இல்லாததால் என்னால் இணைப்பு கொடுக்கமுடியவில்லை . திரு . உதயகுமார் மத உணர்வுகளை தூண்டிவிடுவதாக தானே அர்த்தம் .
சிறுபான்மை என்றால், எப்பொழுதும் ஏன் மதசிறுபான்மையை நினைக்கிறீர்கள்? கூடங்குளம் அணு உலை போராட்டம் கிறித்துவர்களும், இந்துக்களும் இணைந்து தான் போராடிவருகிறார்கள்.
நேற்று தாக்குதல் நடத்திய இந்துமுன்னணியினரின் சகோதர பிரிவான பாரதிய ஜனதாவின் அந்த பகுதி குழு அணு உலையை எதிர்த்து போராட்டம் சமீபத்தில் நடத்தினார்கள்.
Post a Comment