மதுரை மாவட்டத்தில் பேரையூர் அருகில் ஒரு கிராமம். கோயில் திருவிழா சமயத்தில் நண்பனின் ஊருக்கு 15 பேருக்கு மேல் சென்றிருந்தோம்.
அது ஒரு குன்று. மழையோடு வேகமான காற்றும் கைகோர்த்திருந்தது. எங்கும் சிறு சிறு செடிகள் தான். மரங்கள் எதுவும் இல்லை. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.
கொடுக்கப்படும் இன்ஸ்டண்ட் தலைப்பில் ஒவ்வொருவரும் மூன்று நிமிடம் உரையாற்றவேண்டும். பேசுகிறவருக்கு கதகதப்பாக இருக்கும். கொடுக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக பேசுவார். அமர்ந்து கேட்கும் மற்றவர்களுக்கு குளிர் வாட்டும். அவர்களோ சீக்கிரம் முடி! என விரட்டுவார்கள்.
எல்லோரும் பேசி முடித்த பொழுது, மழை ஒருவாறு நின்றிருந்தது!
மழை நினைவுகள் - 1
0 பின்னூட்டங்கள்:
Post a Comment