> குருத்து: 'கலைஞர் டிவி' - ஆரம்பமே 'அசத்தலா' இருக்கே!

September 14, 2007

'கலைஞர் டிவி' - ஆரம்பமே 'அசத்தலா' இருக்கே!


நாளை முதல், இந்திய சானல்களில் (பில்டப் அதிகமா இருக்கோ!) தமிழ்சானல் ஒன்று ஆர்ப்பாட்டமாய் தன் ஒளிபரப்பைத் தொடங்க இருக்கிறது.

காலை முதல் இரவு வரைக்கும் திரை நட்சத்திரங்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்த நேரங்களை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பதை, இன்றைக்கே டிரைலர் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாளை முதல், தமிழனின் வாழ்வு ஒருபடி உயரப்போகிறது(!).

திராவிட வெகுஜனக் கட்சிகளில், திமுகவின் தலைவர் கலைஞர் தான், இன்றைக்கும் அவ்வப்பொழுது பகுத்தறிவு பேசி, இந்துத்துவ ஆட்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார். இது நாடறியும்.

ஆனால், அப்படிப்பட்ட கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.

இப்படிப்பட்ட சிறப்பான நாட்களை விட்டு விட்டு, ஏன் விநாயகர் சதுர்த்தியன்று தொடங்குகிறார்கள்?

கலைஞருக்கு பிடிக்காத நபர் யாராவது இப்படி இந்த நாளில், சானல் தொடங்குவதைப் பற்றி, கேள்வி கேட்டிருந்தால், கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார்.

"ஒரு தடவை சிவபெருமான் கையாலயத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிட, தனிமையில் விடப்பட்ட பார்வதி தன் மீது அன்பு செலுத்தவும் தன்னை பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கை உருட்டி இளைஞன் ஒருவனை உருவாக்கினாள். அவனைக் காவலாளாக நியமித்து யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டு, குளிக்க செல்கிறாள்.

இதற்கிடையில், சிவன் தியானத்திலிருந்து விடுபட்டு, பார்வதியின் அந்தப்புரத்திற்குள் சிவன் நுழைய, காவலுக்கு நின்ற அவன் அனுமதி மறுக்க, சிவன் கோபப்பட்டு, தலையை வெட்டிவிடுகிறார். பிறகு, அழுது வடிந்த பார்வதியை சமாதனப்படுத்த, வடதிசையில் கண்ணில்பட்ட ஒரு யானையின் தலையை வெட்டி வந்து ஒட்ட வைக்கிறார்கள். இப்படித்தான், யானை முகம் கொண்ட விநாயகர் தோன்றினார்".

இதிலிருந்து நாம் பெறுகிற செய்தியாவது, அழுக்கில் உருவானவர் விநாயகர். இந்த நாளில் தொடங்கப்படுகிற சானலின் தரமும் இப்படி அழுக்காகத்தான் இருக்கும்"

இது சிரிப்பதற்காக, சொல்கிற செய்தி அல்ல! திமுகவின் கொள்கைகளும், இந்துத்துவ கொள்கைகளும் இருவேறு துருவங்கள் என்று நினைப்பவர்கள், இப்படி இரண்டும் இணைகிற இந்த புள்ளியைப் பார்த்தாவது, புரிந்து கொண்டால் சரி.

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

இதேபோல ஒரு பதிவு மகா என்ற பேரில்.யாருப்பா அது காப்பியடிப்பது?
நீங்களா அவரா இல்லை ரெண்டும் கட் பேஸ்ட் அயிட்டமா

Nakkiran said...

mmmmmm....

Valid points....

Anonymous said...

அந்த புள்ளியை தேடிக்கொண்டிருக்கிறேன்.:-)
தொலைக்காட்சி என்றாலும் போடுகிற பணம் பல மடங்காக பெருகவேண்டாம்?
அதுக்குத்தான் பிள்ளையார்.

✪சிந்தாநதி said...

//கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.//

அண்ணா பிறந்த நாள் எது என்று சரியான தேதி சொல்லுங்க ஐயா!

Socrates said...

14ந் தேதி பதிவிட்டு, 15ந்தேதி, காலையில் தேதி கிழிக்கும் பொழுது, அண்ணா அருகில், விநாயகரைப் பார்த்ததும், பதறிப்போய்விட்டேன்.

இந்த பதிவில், அண்ணா பிறந்தநாள் இரண்டு நாள்களுக்கு முன்பு என குறிப்பிட்டிருந்தேன். அதற்காக வருந்துகிறேன்.

அந்த செய்தி குழப்பத்திற்கு காரணம், இரண்டு நாள்களுக்கு முன்பாக, கருணாநிதி "சிறுபான்மையினருக்காக இடஒதுக்கீடு அவசரச் சட்டத்தை" அண்ணா பிறந்த நாளில் அறிவிப்பதாய் ஒரு செய்தி வெளிவந்தது.

அண்ணா பிறந்த நாளை உறுதிப்படுத்த, காலண்டரில் தேடினேன். காலண்டரின் பின் அட்டை மதங்களுக்கானதாய் தானே இருக்கிறது.

திமுகவின் வலைத்தளத்தில் தேடினால், வலைத்தளம் கட்டுமானத்தில் இருப்பதாக பார்த்தேன். இப்படி தேடியதில் சில குழப்பங்கள்.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பதிவிற்கான விவரங்களை தவறாகப் போடுவது, பாரிய தவறு தான்.

இனி, வருங்காலங்களில், தரவுகளை சரிப்பார்த்த பிறகே, பதிவிடுகிறேன்.

ஆனால், திமுகவில் இருக்கும் பலரிடம் இந்துத்துவ கருத்தியல் நன்றாகவே இருக்கிறது. அதிமுகவுக்கும், திமுகவிற்கும் சிலர் அடிக்கடி கட்சி மாறுகிறார்களே! நாளை, பி.ஜே.பி.க்கும் கூட எந்தவித உறுத்தலும் இல்லாமலும், இயல்பாய் இவர்கள் மாறுவார்கள். அதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் - முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்றைய பாரதிய ஜனதாவில் இருக்கும் திருநாவுக்கரசு.

Palani said...

கொள்கைக்காக கட்சி அது அந்தக்காலம். கொள்ளைக்காக கட்சி இது இந்தக் காலம்.