> குருத்து: 'ஜென்டில்மேன்' நர்சிம்மும்! ஆதரவு தரும் 'கண்ணியவான்களும்!'

June 2, 2010

'ஜென்டில்மேன்' நர்சிம்மும்! ஆதரவு தரும் 'கண்ணியவான்களும்!'



பதிவர் சந்தனமுல்லையை நர்சிம் என்ற பதிவர் தன் எழுத்துக்களால் குதறியிருக்கிறான் என்பதை வினவின் மூலம் 'பூக்காரி' படித்து அதிர்ந்தேன். அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது. "அது தான் மன்னிப்பு கேட்டுட்டாருல்ல! பிரச்சனையை இத்தோடு முடிச்சுக்கலாம்" என சில நர்சிமை ஆதரிக்கும் 'கண்ணியவான்கள்' கிளம்பிவிட்டார்கள்

"பாருங்க! இவ்வளவு நாளும் நர்சிம் ஒரு ஜென்டில்மேன். கோவத்தில இப்படி எழுதிட்டார்" என்கிறார்கள். ஒருவனின் அறத்தன்மை, பண்பு என்பது நெருக்கடியில் தான் வெளிப்படும். 'ஜென்டில்மேனின்' பச்சையான ஆணாதிக்க, பார்ப்பனிய குணம் இந்த விசயத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாய்... பல பதிவர்கள் நர்சிமை கண்டித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகள் 'ஜென்டில்மேன்' நர்சிம்மை ஆதரித்து எழுதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சுகுணா திவாகரும்.. 'அரிய உண்மையை' கண்டுபிடித்ததை போல துடிக்கிறார். இதுவெல்லாம், நர்சிம்மின் பொறுக்கித்தனத்தை வலுவிழக்க செய்யும் வேலை.

ஒரு பதிவர் என்ற அடிப்படையில் தாமதமாய் சொன்னாலும், எனது நிலையை தெரிவிக்கத்தான் இந்த பதிவு.

சக பதிவர்களுக்கு வேண்டுகோள்!

பார்ப்பனிய ஆணாதிக்க மொழியில் எழுதிய நர்சிம்மை வன்மையாக கண்டியுங்கள். ஆதரவாளிப்பவர்களையும் தனிமைப்படுத்துங்கள். பிரச்சனையை மடைமாற்றுபவர்களையும் கண்டியுங்கள்!

பார்ப்பனீயத்திற்கும், ஆணாதிக்க பொறுக்கித்தனத்திற்கும் எதிராக போராடும் வினவுக்கு தோள் கொடுங்கள் ஆதரவு தாருங்கள்.

பெண்பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.

3 பின்னூட்டங்கள்:

Dr.Rudhran said...

பிரச்சனையை மடைமாற்றுபவர்களையும் கண்டியுங்கள்!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்---அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது-- அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய "Relationship."
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை "Relationship."
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்---வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு "Edit" செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி "Edit" செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் "Double-game" or double-cross" செய்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

Anonymous said...

I vote for you.
Thanks
Sangamithra