> குருத்து: இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ!

October 10, 2011

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ!


திருச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஜெயலலிதா பேசிய 200 வார்த்தைகளில்,

'நான்' 8 முறையும்,
'நானும்' 2 முறையும்
'எனது' 2 முறையும்
'என்னுடைய' 2 முறையும்

தப்பித்தவறி வாய் குழறி ஒரே ஒருமுறை 'நாங்கள்' என்றும் பேசியுள்ளார்.

கூட்டுச்சிந்தனை, கூட்டுத்துவ செயல்பாடு எல்லாம் 'நமது' முதமைச்சருக்கு சுட்டு போட்டாலும், வராது என்பதற்கு இந்த வார்த்தைகள் நல்ல உதாரணம்.

'நான்' என்ற அகந்தை எவ்வளவு தவறானது என மதக்கதைகளிலேயே நிறைய உண்டு. உறவினர்களான இராமகோபாலன், சோ ராமசாமியோ சொன்னால் நல்லது!

நாம் கதைகளை தொகுத்து அனுப்பி வைக்கலாம். என்ன ஒரு பிரச்சனை என்றால், 'நான்'/'என்னை' கொல்ல கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கதை கட்டிவிடுவார் ஜெ. அதுதான் யோசனையாக இருக்கிறது! :)

2 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

ஒரு பழமொழி சொல்வார்கள். சாதிப்புத்தி
போகாதுன்னு அது மாதிரி இருக்கு அம்மா பேச்சு

Unknown said...

நானும் அந்த ”நானை”எண்ணினேன்.நான்,நான்,நான்.என்று சொல்ல நமக்கு நாணமாயிருக்கிறது.அவருக்கு அது ஈகோ பிரச்சனை.