சென்னை
மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள்
நகர்.
பத்து
ஆண்டுகளுக்கு முன்பு
அது
ஒரு
எளிமையான
கெங்கை
அம்மன்
கோவில்!
பக்தர்களிடம் வசூல்
செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார் அவதரித்தனர்!
பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர்
தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.
கடவுள்
நம்பிக்கையுள்ள
என்
அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!
பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!
கடவுளுக்கு
அசையும் சொத்துக்கள்,
அசையா
சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர்
எழும்பியது!
நல்ல
கனமான
இரும்பு கேட்
வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது!
பூக்கடை வந்தது!
விபூதி,
குங்குமம்,
பூஜை
பொருட்கள் விற்க
கடையும் வந்து சேர்ந்தது!
அன்னதானம் போடும்
பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.
எல்லாம் இருந்தாலும்
ஏதோ
ஒன்று
குறைவது போல
மனதில்
தோன்றிக்கொண்டே இருந்தது!
இன்று
வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள்
நிறைய
இருந்தன.
தை
மாத
குளிரில்
கண்கள்
உள்ளடங்கி
ஒரு
வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி
கொண்டிருந்தார்.
'முழுமை' பெற்றது போல
இருந்தது
கோவில்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment