
இரண்டாவது மாடியில்
நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன்!
கார் ஒன்று விர்ரென பறந்தது!
காற்றின் வேகத்தில் காரிலிருந்து
தேசியக்கொடி விழுந்தது!
கார் திரும்பி வரும் என நம்பினேன்!
வரவே இல்லை.
பரபரப்பான வீதி அது!
எல்லாவித வண்டிகளும்
எல்லாவித மனிதர்களும்
கடந்து போனார்கள்!
அரை மணி நேரம் - யாரும்
பளபள தேசியக்கொடியை
கண்டுகொள்ளவேயில்லை!
இரண்டு நாள்களில் - தொலைக்காட்சிகளில்
பாய்ந்து பாய்ந்து
பலமுறை அணைத்து கொண்டிருக்கும்
ரோஜா கணிப்பொறி வல்லுநர்
நினைவில் வந்துபோனார்!
நிழல் அது!
நிஜம் இது!
ஆடிக்காற்று
மெல்ல மெல்ல நகர்த்தி
குப்பைக்கு கொண்டு சேர்த்தது!
1 பின்னூட்டங்கள்:
ஆம் தோழர்,
ஆடிக் காற்றுக்குத்தான் அதன் உண்மையான மதிப்பு தெரிந்திருக்கிறது.
Post a Comment