முன்குறிப்பு : ஈழ தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக தழுவிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த போராட்டம் குறித்தான பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பதிலளித்தார். முன்பு ஆடியோவாக வெளிவந்த பேட்டி, இப்பொழுது "இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி?" என நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. வாங்கிப் படியுங்கள்!
விலை ரூ. 10
39 பக்கங்கள்
*****
"ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர்.
தோழர் மருதையன் இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது.
ஒரு மணி நேரம் – இருபத்தி மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த நேர்காணலில் அமெரிக்காவின் நோக்கம், மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், ஈழத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் இந்தியா நண்பனா இல்லை எதிரியா, ஈழ விடுதலை குறித்த காரியவாதப் பார்வை, புலிகளின் அரசியல் தவறுகள், இது தொடர்பான முப்பதாண்டு வரலாறு, திமுக, அதிமுகவின் சவடால் அரசியல், தற்போது போராடும் தமிழக மாணவர்கள் என்று ஈழம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் தோழர் மருதையன் விளக்குகிறார்.
ஈழம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சரி, தவறு குறித்த வெளிப்படையான கருத்துக்கள், நடைமுறையில் செய்ய வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை என்று ம.க.இ.க.வின் அணுகுமுறை மற்றும் நடைமுறை, செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாக காட்டுகின்றதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.
தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
இந்த நேர்காணலை உங்கள் நட்பு வட்டாரத்தில் விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
******
வெளியீடு :
மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
நூல் கிடைக்குமிடங்கள்:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367