சத்யராஜ் நடித்த ”ஜீவா” படத்தில் ஒரு டைரியை கைப்பற்ற வெறித்தனமாய் துரத்துவார்கள் வில்லன் கும்பல். அது போல ஒரு கதை தான் இந்தப் படமும். அமெரிக்க உளவுத்துறையில் உள்ள மோசமான நபர்களைப் பற்றிய ஆதாரங்களை பட்டியலிட்டு இருக்கும் ஒரு டிஜிட்டல் கோப்பை (File) நாயக
ன் வைத்திருக்கிறார். அவரை கொன்றாவது அதை கைப்பற்ற வேண்டும் என துரத்துகிறார்கள்.
அமெரிக்க உளவுத்துறை ஒவ்வொரு நாட்டிலும், தான் ரகசியமாய் கைது செய்யும் நபர்களை
விசாரிக்க யாருக்கும் தெரியாத ரகசியமாக ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்கள். அதற்கு
பெயர் தான் Safe House. அதில் ஒரு இளைஞன் இளம்
அதிகாரியாக வேலை செய்கிறார். நாயகனைப் பிடித்து
அந்த இடத்திற்கு கொண்டு வருகிறார்கள். வந்த கொஞ்ச நேரத்திலேயே பின்னாலேயே ஒரு குழு
வந்து எல்லோரையும் சுட்டுத்தள்ளுகிறது. நாயகனை அங்கிருந்து நகர்த்தி தப்பிக்கிறான்
இளைஞன். பின்னால் விடாமல் துரத்துகிறது. ஒரு
கட்டத்தில் நாயகன் அந்த இளைஞனிடமிருந்தும் நாயகன் தப்பிக்கிறார். ஒரு பக்கம் வில்லன்
கும்பல் துரத்த, நாயகன் தன் வேலையை தக்க வைத்துக்கொள்ள துரத்துகிறான்.
பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
*****
அமெரிக்க உளவுத்துறை என்பது அமெரிக்கா தன் அரசியல் ஆதிக்கத்தை உலகம் முழுவதும்
தக்க வைப்பதற்காக உள்ளடி வேலைகளை அயராது செய்வது தான் தன் வேலை. வரலாறு நெடுகிலும் சி.ஐ.ஏ செய்த கொலைகளும், சித்திரவதைகளும்
உலக அளவில் இழிபுகழ் பெற்றவை. ஒருவேளை அமெரிக்காவின்
அரசியல், இராணுவ மேலாண்மை வீழும்பட்சத்தில் (வீழவேண்டும். அப்பொழுது தான் உலக நாடுகளுக்கு
விடிவு) சி.ஐ.ஏவில் வேலை செய்த முன்னாள், இன்னாள்
அதிகாரிகள் என அனைவருமே விசாரணை வைத்து கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். (அமெரிக்க உளவுத்துறையில் கொலைகள், சித்திரவதைகள்
பற்றி அறியவேண்டும் என்றால், சொல்லுங்கள் ஆதாரங்களை பின்னூட்டத்தில் பகிர்கிறேன்.)
டென்சில் வாசிங்டன் தான் நாயகன். சிறப்பாக செய்திருக்கிறார். Ryan Rodney Reynolds தன்னை நிரூபிக்க துடிக்கும் இளம் அதிகாரியாக வருகிறார்.
ஒரு வழியாக டென்சிலின் முக்கிய படங்களையும், கிடைத்த படங்களையும் பார்த்துவிட்டேன்
என நினைக்கிறேன். ஒரு சில படங்கள் எங்கும் இணையத்தில் இல்லை.
ஆக்சன் படங்களில்
விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம். நெட் பிளிக்சிலும், அமேசான் பிரைமிலும் இருப்பதாக
இணையம் சொல்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment