நாயகன் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் துறையில் இரண்டு வருடங்கள் வேலைப் பார்த்துவிட்டு, மாற்றலாகி போதை பொருள் தடுப்பு துறைக்கு வருகிறார்.
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அவனை அழைத்துக்கொண்டு நகர்வலம்
வருகிறார் சீனியர் அதிகாரி. பகுதியில் போதை விற்கும் ஒரு இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். அங்கு வந்து போதை பொருளை வாங்கிச் செல்லும் மூன்று
இளைஞர்களை விரட்டிப்போய், அவர்கள் வாங்கி வைத்திருந்ததை பிடுங்கிவிட்டு, மிரட்டி அனுப்புகிறார். அந்த போதைப் பொருளை நாயகனை பயன்படுத்த சொல்கிறார். அவன் முடியாது என மறுக்கிறான். ”என்னென்ன போதைப்
பொருள் எப்படி என தெரிவது இந்த வேலையில் முக்கியம். ஆகையால் நீ பயன்படுத்தியே ஆகவேண்டும்”
என துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறான்.
சீனியர் தனக்கு தெரிந்த, முன்பு போலீசாய் இருந்து, இப்பொழுது
போதை பொருள் கடத்தும் ஒரு ஆளை போய் பார்க்கிறார்கள். பிறகு உயரதிகாரிகளை போய் பார்க்கிறார். பிறகு, தாங்கள் சந்தித்துவிட்டு வந்த அந்த ஆளை போலி
என்கவுன்டரில் போட்டுத்தள்ள இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டு கிளம்புகிறார்கள். அங்கு
அந்த ஆள் மறைத்து வைத்திருந்த 4 மில்லியன் டாலரை ஆளுக்கு 2.50 லட்சம் டாலர் என எடுத்துக்கொண்டு,
மீதி 3 லட்சம் டாலரை அரசிடம் ஒப்படைத்துவிடலாம் என பேசிக்கொள்கிறார்கள். இதில் நாயகன்
உடன்பட மறுத்து, தனக்கான பணம் வேண்டாம் என்கிறார்.
அவனை லஞ்சத்திற்குள் விழ வைக்க சீனியர் அதிகாரி டிசைன் டிசைனாக
பேசினாலும் அவன் மறுக்கிறான். அவன் போக்கில் விட்டால், தங்களை மாட்ட வைத்துவிடுவான்
என முடிவு செய்து, அவனையே அந்த முன்னாள் போலீசை சுட்டுக்கொல்ல சொல்கிறார்கள். அவன்
மறுக்கிறான்.
அதன் பிறகு என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு துறையில் சீனியர் அதிகாரி, அதற்கு மேல் உள்ள அதிகாரிகளும்
லஞ்ச பேர்வழிகள் எனில் அதில் ஒரு நல்லவர் சிக்கிக்கொண்டால், அநேகமாக டார்ச்சர் செய்து,
வேலையை விட்டு துரத்திவிடுவார்கள் அல்லது அதிகப்பட்சம் கொன்றுவிடுவார்கள் என்பது நிதர்சனம்.
என் நண்பர் ஒருவர் பத்திர பதிவு துறையில் ஊழியராக வேலைக்கு சேர்ந்த
முதல் நாள் அவருக்கு கொடுத்த பங்கு பணம் ரூ. 300. அவர் வாங்கவில்லை. அவர் அதற்கு பிறகும்
10 ஆண்டுகளுக்கு மேலாக லஞ்சம் வாங்காமல் வேலை செய்தார். சந்திக்கும் பொழுதெல்லாம்,
லஞ்சம் வாங்காமல் இருப்பதால், எவ்வளவு தொல்லைகளை அனுபவிக்க முடிந்தது என்பதை கதை கதையாக
சொல்வார். இப்பொழுது ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நேர்மையாக இருந்ததால், டார்ச்சர் செய்ததால், தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களையும் செய்திகள் வழியாக கேள்விப்படுகிறோம்.
இதெல்லாம் தனிநபர் பிரச்சனை இல்லை. சிஸ்டமே கோளாறாக இருக்கும் பொழுது, சிஸ்டத்தைத்
தான் மாற்ற முயலவேண்டும்.
ஒரு நாள் கதை தான் படம். அதனால் தான் Training Day என்கிறார்கள்.
நல்லா கொடுத்தன்யா டிரெனிங்! டென்சில் வாசிங்டன் தான் அந்த சீனியர் அதிகாரியாக வருகிறார்.
அருமையான நடிப்பு. அதற்காக சிறந்த நடிகர் என்ற
பிரிவில் அகாடமி விருதை பெற்றுள்ளார். நாயகனகாக
வரும் Ethan Hawke நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
Alonzo: "To Protect The Sheep You Gotta Catch The Wolf, And
It Takes A Wolf To Catch A Wolf."
Alonzo: "Nothing's Free In This World, Jake. Not Even
Arrest Warrants."
0 பின்னூட்டங்கள்:
Post a Comment