1. தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறித்து, ஆயுதப் போராட்டத்தில் தள்ளியது. அதற்கான எதிர்விளைவாய், சில பத்தாண்டுகள் உள்நாட்டில் போர் நீடித்தது!
2. போரைத் தூண்டிவிடுவதும், அதற்கு ஆயுதம் சப்ளை செய்வதும், ஏகாதிப்பத்தியங்கள் தான். இலங்கைக்கு நிறைய ஆயுதங்களும், அரசியல் ஆதரவும் தந்தார்கள்.
3. விடுதலைப் புலிகளையும், இறுதிப் போரில் மக்களையும் கொன்று குவித்து, "தற்காலிகமாக" வென்றார்கள். ஆனால் ஏகாதிப்பத்தியங்களின் கடன் வலையில் சிக்கிக்கொண்டார்கள். அதில் ஒரு பகுதி தான் சீனாவிற்கு துறைமுகத்தை எழுதிக்கொடுத்தார்கள்.
4. உள்நாட்டுப் போர் ஏகாதிப்பத்தியங்களால், முடித்து வைக்கப்பட்ட பொழுதும், அதற்கு பிறகாவது உற்பத்தியை அதிகப்படுத்த, பொருளாதார நிலையை சரி செய்ய மெனக்கெடவில்லை. போரில் "வென்று"விட்டோம் என்ற திமிரிலேயே சுற்றினார்கள்.
5. மேலே உள்ள காரணங்கள் தான் பிரதானமானவை. ஊடகங்கள் சில விசயங்களை பேசுகிறார்கள். அதெல்லாம் இரண்டாம் நிலையில் உள்ளவை.
6. இலங்கைக்கு சுற்றுலா வருமானம் முக்கியமானது. கொரானா உலக மக்களை முடக்கிவைத்தது. ஆகையால், இலங்கையின் சுற்றுலா வருமானம் குறைந்தது.
7. கொரானா காலத்தில் உலகம் முழுவதுமே உற்பத்தி சிக்கலானதால், இலங்கையில் உள்ள மக்கள் பல்வேறு வெளிநாடுகளில் வேலை செய்து பணம் அனுப்புவது சிக்கலானாது.
8. தேர்தல் வாக்குறுதியாக தேசிய வரியை 15% லிருந்து சரிபாதியாக குறைத்தார்கள். அதனால் தேசிய வருமானமும் பாதியாக குறைந்தது. இது ஒரு கணிசமான நெருக்கடி தந்தது.
(உடனே இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம், நமது நாட்டிலும் மாநிலங்களின் தேர்தலின் பொழுது, நிறைய இலவசங்களை அறிவிக்கிறார்கள். இலங்கை நிலைமை இங்கும் வந்துவிடும் என ஆலோசனை செய்தார்கள். மக்களுக்கு தரும் மான்யங்களை விட, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தருவதை நிறுத்துங்கள் என ஒருபோதும் ஆலோசனை தரமாட்டார்கள்
9. ஒரு நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது ஆரோக்கியமான நிலைமை இல்லை. அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக குறையும். இலங்கையின் மேல்த்தட்டு வர்க்கத்தின் நுகர்வு அதிகம் இருந்தது. ஆகையால், தான் இறக்குவதி மிகவும் அதிகமானது என்கிறார்கள்.
10. நிரவாக குளறுபடி. தேர்தலில் ஜெயித்த பிரதிநிதிகள் 250 பேர் என்றால், துறைவாரியான அமைச்சர்களின் எண்ணிக்கை சரிபாதிக்கு மேல் இருந்திருக்கிறார்கள். தன்னுடன் ஒத்துழைக்க அவ்வளவு பேரை தாஜா செய்ய வேண்டியிருந்தது முக்கியமான நிலைமை.
11. ஒவ்வொரு துறையிலும் ராணுவத்தின் ஆட்கள் மேலே உட்கார்ந்து கொண்டு நிர்வாகம் செய்திருக்கிறார்கள். இதுவும் குளறுபடிகளுக்கு காரணம் என்கிறார்கள்.
இதெல்லாம் இலங்கை நிலைமையை தொடர்ந்து கவனித்ததின் வாயிலாக, பல பத்திரிக்கைகளில் படித்து நான் அறிந்தவை.
இதெல்லாம் நிலைமை சிக்கலானதற்கு காரணம். நிலைமையை சரி செய்ய, என்னுடைய கருத்து, பெரும்பாலான மக்களின் பிரதிநிதியாக ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி, தலைமை தாங்கினால், நிலைமை சரியாகும். அங்கு சிலர் இருந்தாலும், இப்பொழுது மக்கள் மத்தியில் அப்படி ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெறாததால், தலைமை தாங்குவது உடனடி சாத்தியம் இல்லை.
மீண்டும் ஏகாதிப்பத்தியங்களுக்கு ஆதரவான, அங்குள்ள கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான முதலாளித்துவ ஆட்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தான் கசப்பான நிலைமையாக இருக்கிறது.
நீங்கள் இலங்கை நிலைமைக்கு காரணமாகவும், தீர்வாகவும் என்ன சொல்கிறீர்கள்?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment