> குருத்து: இதயம், முதுகுவலி – ஆபரேசன் - கவிதை

February 10, 2009

இதயம், முதுகுவலி – ஆபரேசன் - கவிதை


முதுகெலும்பு
இல்லாதவருக்கு
முதுகுவலி
ஆபரேசன்.

இதயம் இல்லாதவருக்கு

8 மணி நேர
இதய ஆபரேசன்.

- யாரோ!
- நேற்று வந்த எஸ்.எம்.எஸ்-ல்.

6 பின்னூட்டங்கள்:

ரங்கன் said...

ஹாஹா...
படித்தேன்..ரசித்தேன்...
நன்றி...

மகா said...

ஈழம்

நம்ப சொல்கிறார்கள்!
அல்லது
நம்பும்படி சொல்கிறார்கள்!

முதல்வருக்கு
முதுகில்
சிகிச்சை

பிரதமருக்கு
இதயத்தில்
சிகிச்சை

Anonymous said...

முதல்வர் அவர்கள், இன்றைக்கு அறுவை சிகிச்சைக்காக போகும் பொழுது கூட, திமுக ஈழப் பிரச்சனைக்காக என்னென்ன செய்தது என நீண்ட பட்டியல் வெளியிட்டு இருக்கிறார். அதைப் படிச்சா, இப்படியெல்லாம் கண்டமேனிக்கு எழுதமாட்டாய் நீ?

குருத்து said...

//முதல்வர் அவர்கள், இன்றைக்கு அறுவை சிகிச்சைக்காக போகும் பொழுது கூட, திமுக ஈழப் பிரச்சனைக்காக என்னென்ன செய்தது என நீண்ட பட்டியல் வெளியிட்டு இருக்கிறார். அதைப் படிச்சா, இப்படியெல்லாம் கண்டமேனிக்கு எழுதமாட்டாய் நீ?//

அனானி,

நீங்கள் சொன்னீர்கள் என தினத்தந்தியில் முழுப்பக்கத்திற்கு வெளிவந்துள்ள கேள்வி-பதில் அறிக்கையை நானும் படித்தேன்.

வாந்தி தான் வருகிறது.

ஒரு சிறுபான்மை இனத்தின் மீது கடுமையான எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. அதை இந்த சமயத்தில் கேட்காமல் இதுவரை செய்ததை பட்டியலிடுவதை சகிக்க முடியவில்லை.

அண்ணா சொல்வதாய் அடிக்கடி சொல்வார்கள்.

திமுகவிற்கு பதவி என்பது துண்டு. சுயமரியாதை என்பது வேட்டி.

அதெல்லாம், துவக்க சவாடால்.

இப்பொழுது எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது.

பதவி என்பது வேட்டி. சுயமரியாதை என்பது துண்டாகி போனது.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Subbu said...

இதுக்கு மேல சொல்ரதுக்கு ஒன்னும் இல்ல :