> குருத்து: எழுத, படிக்க தெரியாத மாலைமலர்!

August 17, 2010

எழுத, படிக்க தெரியாத மாலைமலர்!

கடந்த 15/08/2010 அன்று மக்கள் கலை இலக்கிய கழகமும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி - இணைந்து, "கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!" என முற்றுகை போராட்டம் நடத்தின. அதை பின்வருமாறு மாலைமலர் பதிவு செய்திருந்தது.

சென்னையில் கார்பைடு கம்பெனி அலுவலகம் முற்றுகை: 1000 பேர் கைது.
- சென்னை ஆக.15, 2010

சென்னையில் கார்பைடு கம்பெனி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு தொடர்பபன கார்பைடு கம்பெனியின் அலுவலகம் ஈக்காடுதாங்கலில் உள்ளது. இக்கம்பெனியை மூடக்கோரி மக்கள் கலை இயக்கிய கழகம், ஜனநாயக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஜனநாயக புதிய முன்னாள் விவசாயிகள் விடுதலை முன்னணி - ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதற்காக ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் அசோக் பில்லரில் உள்ல ஜவஹர்லால் ரோட்டில் திரண்டு நின்றனர். பின்னர் போராட்டம் நடத்த சிறிது நேரம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

1000 பேர் கைது

தகவல் அறிந்ததும், போலீஸ் இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் சாரங்கன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தின் ஈடுபட்ட 1000 பேரை கைது செய்தனர். அவர்களில் 300 பேர் பெண்கள்.

இவர்கள் அனைவரும் இப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

****
இந்த செய்தியை படிக்கும் பொழுது, இதை எழுதிய ரிப்போர்ட்டர் களத்திற்கு வந்ததாக தெரிகிறது. அங்கு நின்று போகிற வருகிற பொதுமக்கள் அனைவருக்கும் தோழர்கள் போராட்டம் தொடர்பான துண்டறிக்கையை விநியோகித்து கொண்டு இருந்தார்கள். அப்படி வாங்கிய துண்டறிக்கையில் அமைப்பு பெயர்கள் தெளிவாக இருந்தன. அப்படி இருக்கும் பொழுது, ஏன் தப்புத்தப்பாக அமைப்பு பெயரை போடுகிறார்கள்? மாலைமலருக்கு எழுத, படிக்க தெரியாதா என்ன?

புரட்சிகர அமைப்பு நடத்துகிற எந்த போராட்டங்களும் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் பல பத்திரிக்கைகளும், சானல்களும் மிகுந்த கவனத்துடன் வேலை செய்கின்றன. அதனால் தான் இந்த போராட்ட செய்தியை கூட பல பத்திரிக்கைகளும், சானல்களும் கண்டும் காணாதது போல இருந்துவிட்டன.

'தேசிய நீரோட்டத்தில்' கலக்காமல் இருக்கும் எந்த அமைப்பு செய்திகளையும் இப்படித்தான் இருட்டடிப்பு செய்கிறார்கள். இருப்பினும், போராட்ட செய்திகளை எப்பொழுதாவது, வெளியிட்டால், இப்படித்தான் அமைப்புகளுக்கு அவர்களாகவே மேலே உள்ளது போல பெயர் சூட்டுவார்கள்.

2 பின்னூட்டங்கள்:

செங்கொடி said...

இயக்கப்பெயரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் டௌ என்ற பெயரையும் போடாமல் பொதுவாக கார்பைடு கம்பனி என்றும் எழுதியிருக்கிறார்கள்.

எதை குழப்ப வேண்டும் என்றும் தெரிந்திருக்கிறது, எதை மறைக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்கிறது.

மக்கள் இதுபோன்ற நாளிதழ்களை மறக்க வேண்டும்.

செங்கொடி

kalagam said...

இது திட்டமிடப்பட்ட சதி. 2005 செ 12 -ல் நடைபெற்ற கோக் எதிர்ப்பு போராட்டத்தின் போது கூட அமைப்பின் பெயர்களை திட்டமிட்டே மாற்றி இருந்தார்கள். தோழர் மருதையன் பெயரை மாத்தையா என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அந்த விசயத்தில் தினமலர் யோக்கியன். ஆமாம்!!!! அமைப்பின் பெயர்களை சரியாக போட்டு பின்னர்ர் இப்படடி எழுதுவார்கள் "சென்னை நகரில் நக்சலைட்டுகள் ஊடுருவல், நக்சலைட்டுகள் போலீசுக்கு சவால், காட்டில் இல்லை இங்கே இருக்கிறோம் என அறை கூவல்"

கலகம்