> குருத்து: எதை விட்டுக்கொடுக்க கூடாது? - தோழர் மருதையன்

February 15, 2011

எதை விட்டுக்கொடுக்க கூடாது? - தோழர் மருதையன்


முன்குறிப்பு : சமீபத்தில் தோழர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நடைபெற்றது. தோழர் மருதையன் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என மேடைகள் தோறும் பேசுவார்கள். நான் விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன். எதை விட்டுக்கொடுக்கலாம்? எதை விட்டுக்கொடுக்க கூடாது? ஒரு மனிதன் எதை விட்டுக்கொடுக்கிறான் என்பதில் தான் அவனுடைய தரம் இருக்கிறது.

ஒரு வேளை இந்த தம்பதியினர் இந்த திருமணமுறை வேண்டாம். நாங்கள் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறோம் என பெற்றோர்களுக்கு விட்டுக்கொடுத்திருந்தால், இந்த மேடைக்கு நான் வந்திருக்க மாட்டேன். நான் இந்த திருமணத்தை விட்டுக்கொடுத்திருப்பேன்.

அவர்கள் விட்டுக்கொடுக்காமல் போராடியதால், இங்கே இருக்கிறார்கள். ஒரு விழுமியத்திற்கு எது நியாயம்? எது சரி என்பதில், ஆணோ, பெண்ணோ விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன்.

சில்லறை விஷயங்களை விட்டுக்கொடுப்பது என்பது வேறு! கொள்கை விஷயங்களை விட்டுக்கொடுப்பது என்பது வேறு! ஆனால், இந்த இரண்டிற்குமான வேறுபாடினை புரிந்து கொள்ளாமல், நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், நாங்க கொஞ்சம் விட்டுக்கொடுப்போம் என்கிறார்கள். இதென்ன தொகுதி பங்கீடா? அப்படி விட்டுக்கொடுத்தல் என்பது சாத்தியமில்லை.

கொள்கை ரீதியானவற்றில் விட்டுக்கொடுப்பது என்பதில் சாத்தியமில்லை.அப்படி விட்டுக்கொடுக்காத வகையிலே, இந்த தம்பதியினர் போராடி இருக்கிறார்கள். தொடர்ந்து போராட வேண்டும் என்ற என் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

****
இந்த காதல், திருமணம் என்பது வாழ்க்கையின் துவக்கம். இந்த குடும்ப வாழ்க்கை துவங்கிய பின்னர், சாதி மறுப்பு, சம்பிரதாய மறுப்பு என்பதெல்லாம், இந்த மேடையோடு முடிந்துவிடக்கூடாது. நம்முடைய காதலுக்கு தடையாக இருக்கிறது என்பதற்காக இந்த சாதியை இப்பொழுது எதிர்த்திருக்கிறோம்.

தலைமை உரையில் வழக்கறிஞர் ராகுல் பேசும் பொழுது, ஒரு வன்னிய சாதி ஆணுக்கும், தலித் சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்ததுப் பற்றி குறிப்பிட்டார். அதே ஊரில் அவரே நடத்துகின்ற ஒரு வழக்கில்.. தலித் இளைஞன், வன்னிய சாதி பெண் இருவரும் காதலித்து திருமணம் செய்த 'குற்றத்திற்காக' 200, 300 பேர் என ஊரே கூடி, ஊர் மத்தியில் கண்டந்துண்டமாக வெட்டி, மண்ணெண்னெய் ஊற்றி நெருப்பு வைத்து கொன்றார்கள்.

தொடரும்...

2 பின்னூட்டங்கள்:

குருத்து said...

18 நிமிட தோழர் மருதையன் வாழ்த்துரையை பல பதிவுகளாக போடுவது எனக்கே ஓவராக படுகிறது. பிரச்சனை என்னவெனில், நான் வைத்துள்ள வசதி குறைவான ஓட்டை செல்லில் பதிவு செய்து வைத்துள்ளேன். கேட்டு எழுதி கொண்டிருக்கும் பொழுது, ஒரு குறுஞ்செய்தியோ, அழைப்போ, நினைவுப்படுத்தலோ வந்துவிட்டால், மீண்டும் முதலிலிருந்து தான் வரவேண்டும்.

இப்படி முதலிருந்து வந்து, வந்து, இதுவரை 30 முறையாவது கேட்டிருப்பேன். :) இன்னும் ஒரு பதிவில் முடிந்துவிடும். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள். நன்றி

சீனிவாசன் said...

தோழர் இதன் இறுதி பகுதி எங்கே?

இதற்கு பின் இட்ட இரண்டு இடுகைகள் இதன் தொடர்ச்சியா?

http://socratesjr2007.blogspot.in/2011/08/blog-post_11.html
http://socratesjr2007.blogspot.in/2011/08/blog-post_8306.html