> குருத்து: ஆணாதிக்க ஒடுக்குமுறை!

June 22, 2012

ஆணாதிக்க ஒடுக்குமுறை!

நேற்றிரவு 11 மணி துவங்கி 12 மணி வரை டிஸ்கவரி தமிழ் சானலில் பெண்கள் எவ்வாறெல்லாம் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள், பெண்கள்  தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை ஒரு நிகழ்ச்சி மூலம் போராடினார்கள் என்பதை விளக்கினார்கள். நிகழ்ச்சியின் இடையில் இருந்து தான் பார்த்தேன்.

பெண் தெய்வ வழிபாடு துவங்கி, சதி, உடன்கட்டை ஏறுதல்,பர்தா அணிதல், பெண்களுக்கு சுன்னத், பிறப்புறுப்புக்கு பாதுகாப்பு சாதனம் என பல விசயங்களையும் அலசினார்கள்.

அதில் ஒன்றிரண்டு சொல்லவேண்டுமென்றால்...

"கிறித்துவ முறைப்படியான திருமணத்தில் இரண்டாம் விரலில் மோதிரம் அணிவதற்கான காரணம், அந்த விரல் மற்ற விரல்களை போல சுதந்திரமாக இயங்க முடியாது என்பதால் தான்!"

தேன்நிலவு காலம் 4 வாரம் என்பதற்கு முக்கிய காரணம்! ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலத்திற்கான சராசரியான இடைவெளி 4 வார காலம்.  தன்னுடைய கருதான் தன் மனைவியின் கருவில் வயிற்றில் உருவாகிறது எனப்தை உறுதிப்படுத்துகிறது.

- இப்படி பல தகவல்கள்!

இவற்றை வரலாற்று ரீதியாக விளக்குவதில், ஆண், பெண் அரசியல் என்பதாக இருந்தது.  மார்க்சிய கண்ணோட்டம் இல்லை என்பது குறை!

டிஸ்கவரி நம்ம ஊர் விஜய் டிவி போலதான், மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள்.  கண்டிப்பாய் பாருங்கள்!

0 பின்னூட்டங்கள்: