> குருத்து: மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழும்! நம்மிடம் பணம் இருக்காது!

June 19, 2012

மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழும்! நம்மிடம் பணம் இருக்காது!

ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத்தின் விலையை ஏப்ரல் 1க்கு முன்பாக மாநில அரசுகள் விலையை நிர்ணயம் (ஏற்ற) வேண்டும். இல்லையெனில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் கேட்கும்!

-  தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி கற்பக விநாயகம்.- தினத்தந்தி - 18/06/2012

கடந்த ஏப்ரலில் மின்சார விலையை தாறுமாறாக ஏற்றிய பொழுது, 'இந்த விலை ஏற்றம்  இன்னும் ஓராண்டு தான் அமலில் இருக்கும்!' என்ற செய்தியை எத்தனை பேர் கவனித்தோமோ தெரியவில்லை.  இந்த தாறுமாறான விலை உயர்வுக்கு காரணம் கட்ந்த 7 வருடங்களாக விலையை ஏற்றவில்லை என காரணம் சொல்கிறார்கள்.  அப்பட்டமான பொய். 

மின்சாரம் தனியார்மயமானது தான் காரணம்.  ஒரு யூனிட் ரூ. 17வரை தனியாரிடம் கொள்முதல் செய்ததும், ஊக சந்தையில் அனுமதித்ததும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் ரூ. 3.50க்கு தருவதும் தான் மின்சார வாரியம் ரூ.50000 கோடிக்கு மேல் கடன்பட்டதற்கு காரணம்.

ஒப்பந்தம் போட்டுவிட்டதால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை ஏற்றமுடியாது என்கிறார்கள்.  ஒப்பந்தம் போடாமல் வாக்கு அளித்த மக்களுக்கோ, தண்டனையாக மேலும் மேலும் சுமை ஏற்றுகிறார்கள்.

ஜெயலலிதா அடிக்கடி சொல்வது போல, தமிழகம் மிகை மின்மாநிலமாக மாறும். அவர்கள் மின்சாரம் தர தயாராக இருப்பார்கள்.   நம்மிடம் தான் வாங்குவதற்கு காசு இருக்காது.   ஆகையால், மின்சார ஒழுங்குமுறை வாரியத்தை ஒழித்துக்கட்ட போராட்டங்களை நாடு முழுவதும் கட்டியமைக்கவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: