> குருத்து: Crash landing on you (2019) தென்கொரியா – ஒரு அறிமுகம்

March 14, 2025

Crash landing on you (2019) தென்கொரியா – ஒரு அறிமுகம்


காதலும் கலாட்டாக்களும்!

நாயகியின் குடும்பம் ஒரு பெரிய பிசினஸ் குடும்பம். வீட்டை விட்டு வெளியேறி தனக்கென ஒரு நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாகவும் நடத்திக்கொண்டிருக்கிறாள். அப்பாவிற்கு இரண்டு பையன்கள். ஒரு நெருக்கடியில் தன் மகளை அழைத்து பெரும் நிறுவனத்தின் பொறுப்பேற்க சொல்கிறார். பசங்க செம வெறுப்படைகிறார்கள்.

இந்த சமயத்தில் வானத்தில் பறக்கும் பாராகிளைடிங் செய்யும் பொழுது எதிர்பாராதவிதமாக புயலடித்து தென்கொரியாவிலிருந்து வட கொரியாவின் பகுதிக்கு சென்று விழுகிறாள். நாயகன் அங்கு இராணுவ அதிகாரி. உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் மகனுமாக இருக்கிறான்.

தென் கொரியா, வட கொரியா - இரண்டு நாடுகளுக்குமான முரண் உலகம் அறிந்தது. பிறகு என்ன நடந்தது என்பதை காதலும், கலாட்டாவுமாக கல்லா கட்டும் நோக்கத்தோடு கமர்சியலான ஒரு தொடராக நகர்த்தியிருக்கிறார்கள்.


நெட் பிளிக்சிலும், பிரைமிலும் இருப்பதாக just watch தளம் சொல்கிறது. ஒரு தொடர் 16 அத்தியாயங்கள். தொலைக்காட்சி என்பதால், கொஞ்சம் நிதானமாக கதைச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயமும் 1 மணி நேரத்திற்கு மேல் போகிறது. இப்பொழுது இரண்டு அத்தியாயங்கள் பார்த்திருக்கிறேன். தினம் ஒன்று என்றால் கூட நான் முடிக்க இன்னும் இரண்டு வார காலம் ஆகும்.

நேரம் நிறைய இருப்பவர்கள் பீல் குட் சீரிஸ் பிடித்தால் இதைப் பார்க்கலாம். இந்த தொடர் கொரியன் வலைத்தொடர்களில் பிரபலம் என்கிறார்கள். நான் சமீபத்தில் தான் கேள்விப்பட்டேன். நீங்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

0 பின்னூட்டங்கள்: