ஆற்றில் மீன்பிடிக்கும் பொழுது ஒரு (அழகிய பெண்!) மண்டையோடு கிடைக்கிறது. நாயகனிடம் அந்த வழக்கு வருகிறது. அறிவியல், விசாரணை இரண்டின் மூலம் மெல்ல மெல்ல முன்னேறி கொல்லப்பட்டது யாரென கண்டுபிடித்துவிடுகிறார்.
இதன் மறுபுறம் ஒரு தொலைக்காட்சியில் ஆவி, பில்லி சூன்யம் குறித்தான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் நாயகி வேலை செய்கிறாள். அவர் தன் குட்டி மகளுடன் புதிய வீட்டிற்கு குடிவருகிறார். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. தனக்கு தெரிந்த சில எக்ஸ்பர்ட் உதவியுடன் அந்த பேய் யாரென கண்டுபிடித்துவிடுகிறார்(!).
அந்த கொலை நடந்தது ஏன்? எப்படி நடந்தது என்பதை மீதிப் படத்தில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு பக்கம் போலீஸ் விசாரணை, மறுபக்கம் பேய். இரண்டிலும் போலீஸ் விசாரணை தான் சுவாரசியம். பேய் பெரிதாக எடுபடவில்லை.
நமது மருத்துவரிடம், வழக்கறிஞரிடம் உண்மையை சொல்லுங்கள். பொய் சொன்னால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பார்கள். இந்தப்படம் அப்படித்தானா? என்கிறது.
பிரித்திவிராஜ் சீரியசான போலீசாக படம் முழுவதும் வருகிறார். தமிழ் படமான அருவியில் நடித்து காணாமல் போயிருந்த ஆதித்தியும் வருகிறார். அந்த குட்டிப்பெண் சுட்டி. ’மனம் கொத்தி பறவை’ நாயகி தான் கொலைசெய்யப்பட்ட பெண்ணாக வருகிறார்.
திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment