தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் செயல்படாமல் இருப்பது அவர்களை முடக்கி வைத்திருக்கிறது. அவர்களின் விரல்களை மருத்துவர் ஹரி சீனிவாசன்தன் தொடர் முயற்சியால் இயங்க வைத்திருக்கிறார். இது ஒரு உலக சாதனை. அவர் பெயரிலேயே Srinivasan effect என உலக சுகாதார மையம் அங்கீகரித்து அறிவித்திருக்கிறது.
படைப்புகளை பலரும் எழுதுகிறார்கள். துறை சார்ந்தவர்கள் தங்களுடைய துறையில் உள்ள அம்சங்களை, சவால்களை, எதிர்காலம் குறித்து எழுதுவது என்பது மிக முக்கியமான அம்சம் அல்லவா!
நம் நாட்டில் எழுதுபவர்கள் மிக மிக குறைவு. நல்ல திறன் இருந்தாலும், எழுதுவதில் பயிற்சி இல்லை என்பதால், எழுதுவதில்லை. அப்படி இருக்கையில் துறை சார்ந்த விசயங்கள் பொதுமக்களுக்கு எப்படி தெரியவரும். அதுவும் குறிப்பாக மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசுவதை குறைத்து சில பத்தாண்டுகளுக்கு மேலே ஆகிவிட்டன.
இப்பொழுது பரவாயில்லை. யூடியூப் எல்லாம் வந்த பிறகு சில மருத்துவர்கள் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார்கள். காணொளிகளைப் பார்க்க முடிகிறது.
துறை சார்ந்தவர்கள் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை வெட்டிவிட்டு, பேசவேண்டும். அது சமூகத்திற்கு மிகவும் அவசியம்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment