1. 1. Claude AI என்றால்?
Claude AI என்பது அமெரிக்காவில் இயங்கும் Anthropic என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கணினி
நுண்ணறிவு உதவியாளர்.
எளிதாகச் சொன்னால் – மனிதர்களின் சொற்பொழிவை நுட்பமாக புரிந்து, பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் செயல்பட உருவாக்கப்பட்ட அறிவு
தளம்.
இந்த
அமைப்பு "நல்ல முடிவுகளுக்கான நெறிமுறைகள்" (Constitutional AI) என்ற முறையில் உருவாக்கப்பட்டிருப்பதால், தவறான
தகவல்,
அபாயகரமான பதில்,
தேவையற்ற ஊகங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2.
Claude AI-யின் பயன்பாடுகள்
(a)
நீளமான ஆவணங்களைப் படித்து புரிதல்
ஒரே
முறையில் ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து, அதன்
சாரம்,
பிழைகள், முன்–பின் முரண்பாடுகள், முக்கிய புள்ளிகள் ஆகியவற்றை விரைவாக தெரிவிக்கும் திறன்
கொண்டது.
(b)
நுட்பமாக எழுதுதல்
குறிப்பாக கடிதங்கள், அறிக்கைகள், விளக்கங்கள், சட்ட ரீதியான உரைகளை
இயல்பான பாணியில் எழுதி
தரும்
திறன்.
(c)
பாதுகாப்பு
மிகக்
கட்டுகோப்பான நெறிமுறைகளால் செயல்படுவதால்,
தவறான
தகவல்
அல்லது
அபாயகரமான பரிந்துரைகள் வர
வாய்ப்பு குறைந்தது.
(d)
மொழி புரிதல் மற்றும் தமிழில் செயல்பாடு
தமிழ்
உள்பட
பல
மொழிகளில் தெளிவான, இயல்பான பதில்களை வழங்கும் திறன்
கொண்டது.
3.
வரி ஆலோசகருக்கு Claude AI என்ன பயன்?
(1)
GST / வருமானவரி
ஆவணங்களைச் சுருக்கமாகப் புரிதல்
- அறிவிப்பு
- நீதிமன்ற
தீர்ப்பு
- உத்தரவு
- தணிக்கை குறிப்புகள்
- PCR / குறிப்பு / SCN
இவற்றை Claude-க்கு கொடுத்தால்,
உள்ளடக்கத்தைப் பிரித்து, நேரடியாக தேவையான அம்சங்களை மட்டும் எடுத்துக் காட்டி விடும்.
(2)
வரி கருத்துரைகளை உருவாக்க உதவும்
வாடிக்கையாளருக்கு எழுத
வேண்டிய:
- விளக்கக்
கடிதம்
- பதில் வரைவு
- கருத்துரை
- ஒப்புநிலை
சாராம்சம்
இவற்றை சூழ்நிலைக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கச் செய்யலாம்.
(3)
தணிக்கை (Audit) ஆய்வில் உதவும்
- பில்லில்
உள்ள கணக்கிழைப்பு
- தவறான வகைப்படுத்தல்
- ITC பிழை
- சப்ளையர்–பெறுநர் முரண்பாடு
இவற்றை விவரங்களுடன் கொடுத்தால்,
சரியான நெறிமுறைகள், உரிய திருத்தங்கள், கவனிக்க வேண்டிய பிரிவுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டும்.
(4)
சட்டத் தீர்ப்புகளை ஒப்பிட்டு பார்க்க உதவும்
ஒரே
விஷயத்தில் பல
தீர்ப்புகள் இருந்தால், ஒவ்வொன்றின் கருத்து, தனிப்பட்ட வேறுபாடு, பொருந்தும் சட்டப் பொறுப்பு போன்றவற்றை ஒரே கட்டத்தில் ஒப்பிட்டு விளக்கி விடும்.
பிழை கண்டறிதல் / கணக்குப் பரிசோதனையில் உதவும்
- GSTR-1 – 3B ஒப்பீடு
- கணக்கு புத்தக–GST ஒப்பீடு
- ITC – RCM நிலை
- இவற்றில்
உள்ள எண்களை Claude-க்கு கொடுத்தால், அதன் அடிப்படை நடைமுறையையும், தவறான உள்ளீடுகளையும் விரைவாகச் சுட்டிக் காட்டும்.
(4)
தினசரி வேலை நேரத்தை குறைக்கும்
- ஆவணங்களைப்
படிப்பது
- சாராம்சம்
எடுப்பது
- விளக்கம்
எழுதுவது
- வாடிக்கையாளர்
கேள்விகளுக்குப் பதில் தருவது
என வரி ஆலோசரின் நேரம் பெரும்பாலும் இதில்தான் செல்கிறது.
Claude இதை மிகத் துல்லியமாக வேகப்படுத்துவதால், வேலை
நேரம்
குறைந்து உற்பத்தி அதிகரிக்கும்.
4.
எங்கு கவனம் தேவை?
Claude AI உங்களுக்கு நுண்ணறிவு உதவி தரும்; ஆனால்
இறுதி தீர்ப்பு, சட்டப் பொருள் உணர்வு, துறைக் கண்ணோட்டம் அனைத்தும் உங்கள் தொழில்முறை முடிவாகவே இருக்க
வேண்டும்.
அதை
கருவியாக பயன்படுத்த வேண்டும், அதை முடிவு செய்யும் அதிகாரியாக
மாற்றிவிடக்கூடாது.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
📞 95512 91721
தொழில்நுட்பம்_கற்போம்_பகுதி13

0 பின்னூட்டங்கள்:
Post a Comment