May 31, 2007
கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்
மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.
ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்த
தங்க ஹெல்மெட் தந்திருப்பார்களோ!
விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?
'வாக்கு வங்கி'
வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
இந்த பதிவை, மகா அவர்களும், கோபா அவர்களும் அவர்களுடைய வலைப்பூக்களில் மறு பதிவிட்டு, தமிழ் மணத்தில் உலாவ விட்டார்கள்.
பல பதிவர்கள் இது பற்றி கருத்து சொன்னார்கள். இந்த செய்தியின் அடிப்படைப் பற்றியும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம் பற்றி தேடியதில், டிராபிக் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன்.
இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னெவென்றால்,
உண்மை அறியாமல், பேரன், பேத்திகளுக்கு அப்பால் 'மக்கள் உயிரின்' மீதும், கரிசனம் கொண்டிருப்பார் என தவறாக நினைத்து பதிவு போட்டுவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
மக்கள் மீது, உண்மையிலேயே கரிசனம் கொண்டு போராடிய டிராபிக் ராமசாமி அவர்களுக்கு நன்றி.
இந்த விவாதத்தில் ஆரோக்கியமாய் பங்கு கொண்ட பதிவர்களுக்கும், மறுபதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றி.
Post a Comment