> குருத்து: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் - சில தகவல்கள்

May 3, 2008

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் - சில தகவல்கள்


இந்திய அரசு அமைப்புச் சார்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கியிருக்கும் காப்பீட்டுத் திட்டம் இந்த E.S.I. திட்டம்.

சமீப காலங்களில், தனது அருமை பெருமைகளை விளக்கி இப்பொழுதெல்லாம் அடிக்கடி செய்தி தாள்களில் விளம்பரம் தந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இந்தியா முழுவதிலும் 1427 மருந்தகங்கள், 143 மருத்துவமனைகள் மூலம் 327 இலட்சம் மக்கள் பலனைடைகிறார்களாம்.

இந்தியாவிலேயே குறைந்த செலவில் காப்பீட்டு திட்டம் என்றால், அது இது தான் என பெருமையாய் சொல்கிறது.

ஒரு தொழிலாளி வாங்குகிற சம்பளத்திலிருந்து 1.75%யும், முதலாளி 4.75%யும் அரசுக்கு செலுத்த வேண்டும்.

நீங்கள் ரூ. 6000 சம்பளம் பெறுகிறவராய் இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மாதம் ரூ. 105/. முதலாளி செலுத்த வேண்டியது ரூ. 285/-. அப்படியென்றால், மாதம் ரூ. 390/- வருடத்திற்கு ரூ. 4680/-. இது தான், இந்தியாவிலேயே குறைந்த செலவிலான திட்டம்.

இந்த திட்டத்தில் சேர வேண்டுமென்றால், உற்பத்தியில் மின்சாரம் பயன்படுத்துகிற நிறுவனமாயிருந்தால் 10 தொழிலாளர்களும், மின்சாரம் பயன்படுத்தாத நிறுவனமாயிருந்த்தால் 20 தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும்.

இந்த அறிமுகம் போதும் என நினைக்கிறேன்.

E.S.I. பற்றிய சமீபத்திய அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

திருமழிசையில் ஒரு உற்பத்தியில் ஈடுபடுகிற நிறுவனம் ஒன்று. அந்த நிறுவனத்திறகு திடீரென, E.S.I. லிருந்து "உடனடியாக ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும்" என அறிவிப்பு கடிதம்.

முதலாளி "நான் E.S.I. யில் விண்ணப்பிக்கவேயில்லை" என்கிறார். இதை நூல் பிடித்தபடி, ஆராய்ந்தால்...

ஒரு குட்டி பிளாஷ்பேக்.

ஒரு நிறுவனம் ஏற்கனவே கூறிய படி, தகுதி பெற்றால் E.S.I.ல் தானாய் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம்முடைய முதலாளிகள் தொழிலாளர்களின் மேல் நிறைய அக்கறை உள்ளவர்கள் தானே! ஆகையால், தானாய் E.S.I.ல் பதிவு செய்ய முன்வரமாட்டார்கள்.

இதற்காகவே, E.S.I. அதிகாரிகளை (Inspectors) நியமித்து இருக்கிறது. அவர்களுடைய வேலை தெரு தெருவாய் சுற்றி நிறுவனங்களில் 10 பேர் வேலை செய்கிறார்களா எனச் சோதித்து, செய்தால்.. அந்த முதலாளியை வலுக்கட்டாயமாய் E.S.I. திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள்.

சேர்த்துவிடுவதோடு, அந்த அதிகாரியின் கடமை முடிந்துவிட்டது.

இதே மாதிரி தான், 2001ம் ஆண்டில் அந்த திருமழிசை நிறுவனத்திற்கு, ஒரு அதிகாரி வந்து வலுக்கட்டாயமாய் சேர்த்துவிட்டிருக்கிறார்.

1.50 இலட்சத்திற்கு கணக்கு என்னவென்றால்...

10 தொழிலாளர்கள் 7 ஆண்டுகள் வேலை செய்தால், என்ன பணம் அரசுக்கு அந்த முதலாளி செலுத்த வேண்டியிருக்குமோ, அதைத் தான் E.S.I. கணக்கிட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

E.S.I.க்கு ஒரு அதிகாரம் உண்டு. முதலாளி பணம் கட்ட மறுத்தால், அவருடைய வங்கி கணக்கிலிருந்து நேரிடையாக எடுத்துக் கொள்ள...அல்லது அந்த முதலாளியினுடைய தனிப்பட்ட சொத்தை கைப்பற்ற, நீதிமன்றத்தில் முறையிட்டு, முதலாளிக்கு சிறைத்தண்டனை வாங்கித் தரவும் முடியும்.

வேறு வழியே இல்லாமல், அந்த பணத்தை அரசுக்கு வட்டியுடன் செலுத்தினார்.

என்றைக்கோ, அபூர்வமாய் நடக்கிற செய்தியில்லை. கடந்த மாதம் ஒரு முதலாளி மூன்று ஆண்டு மொத்தமாய் கட்டியதாய் சொன்னார்.

கடந்த வாரம், அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவன முதலாளி இரண்டு ஆண்டுக்கு கட்டச் சொல்லி கடிதம் வந்ததை காண்பித்தார்.

நமக்கு இயல்பாய் கேள்வி என்னவென்றால்...

முதலாளியிடமிருந்து 7 ஆண்டுக்கு செலுத்த வேண்டிய தொகையை அரசு வட்டியுடன் கைப்பற்றி விட்டது.

கடந்த 7 ஆண்டுகளில், அந்த நிறுவனத்தில் மாங்கு, மாங்கு என வேலை செய்தார்களே, அந்த தொழிலாளிகளுக்கு எந்தவித மருத்துவ உதவியும் கிடைக்காமல் போய்விட்டதே!

இதைத் தான் "Operation success. Patient Dead" என்பார்களோ!

மீண்டும், இந்த திட்டத்திற்கான பெயரை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

"தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்"

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நீங்க கவல படாதீங்க நாம எப்படியாவது லஞ்சம் கொடுத்து இதை சரிபன்னிடலாம் ok வா!!!!!!!!

Anonymous said...

நீங்க கவல படாதீங்க, நாம எப்படியாவது லஞ்சம் கொடுத்து அதை சரி பன்னிடலாம் ok வா!!!!!!!!!

Anonymous said...

நீங்க கவல படாதீங்க, நாம எப்படியாவது லஞ்சம் கொடுத்து அதை சரி பன்னிடலாம் ok வா!!!!!!!!!

Anonymous said...

நீங்க கவல படாதீங்க,, நாம எப்படியாவது லஞ்சம் கொடுத்து அதை சரி பன்னிடலாம் ok வா!!!!!