> குருத்து: சாரு - எக்ஸைல் நாவல் வெளியீட்டுவிழா! - அனுபவம்!

December 6, 2011

சாரு - எக்ஸைல் நாவல் வெளியீட்டுவிழா! - அனுபவம்!


நேற்று உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் பகல்முழுவதும் வீட்டில் புரண்டு கொண்டிருந்தேன். மாலை மண்டை காய்ந்து, எங்காவது போகலாம் என நினைத்து தேடுகையில், எக்சைல் வெளியிட்டு விழா செய்தி கண்ணில்பட்டது.

****

கோட்டு சூட்டெல்லாம் போட்டு, சாருவே நிகழ்ச்சி தொகுத்துக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அவர் இறுதியில் பேசுவதால், விழாவிற்கு வந்தவர்கள் தப்பித்துவிடுகிறார்களாம். அதனால், இந்த முறை தப்பிக்கவிடக்கூடாது என அவரே தொகுத்துவிடலாம் என முடிவு செய்ததாக சொன்னார். என்ன ஒரு பிரச்சனை! தொகுப்பாளினி அல்லது தொகுப்பாளர் ஏற்பாடு செய்திருந்தால் சாருவை புகழ்ந்திருப்பார்கள். இப்பொழுது, அவரை அவரே புகழ்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம். அதனால் என்ன! அது ஒரு சிரமமே இல்லை என்ற அளவில், சந்தோசமாய் தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். எனக்கு தெரிந்து, தமிழ்நாட்டில் தனனைத் தானே புகழ்ந்து கொள்வதில், முதல் இடத்தில் இருப்பவர் ஜெ. இரண்டாவது நபர் சாரு.

****
'அழகன்' படத்தில் கண்ணாடி போட்ட பையன், வீட்டின் நிலைமையை நொந்துகொண்டு, "நாம வேறு எங்காவது பிறந்திருக்கலாம்டா" என்பான் படம் முழுவதும்! சாருவும் எந்த விசயத்தை பேசினாலும், தமிழ்நாட்டில் பிறந்திருக்கவேண்டிய ஆளே இல்லை! என மனதிற்குள் அழுவது நன்றாக தெரிந்தது!

****

சாருவின் புத்தகம் 250யாம். அங்கேயே 200க்கு விற்பதாக சொன்னார்கள். வாங்குகிற ஐடியா சுத்தமாக இல்லை. சாருவின் மாஸ்டர் பீஸ் என பீத்திக்கொள்ளப்படும் ஜீரோ டிகிரி காசு போட்டு வாங்கினேன். எவ்வளவு சிரமப்பட்டு படித்தும், நகரவே இல்லை. நாமும் சில வருடங்களாக இலக்கியம் படிக்கிறோம். சாருவை நெருங்க முடியவில்லையே (!) என நொந்து, படிப்பதை நிறுத்திவிட்டேன். ஆகையால், எக்ஸைலை இலவசமாகவே தந்தாலும் படிக்கிற ஐடியா எனக்கில்லை.

****

கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.

****

நான் போனதே 6.30மணி. அரைமணி நேரம் சாரு சின்சியராக தொகுத்துகொண்டிருக்கும் வேளையில், எனக்கு முன்னாலேயே வந்திருந்து, நிகழ்ச்சியைக் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் (சாரு போலவே, மொத்த முடியும் வெள்ளையாய் இருந்தது!) என்னிடம் கேட்காமல், அருகில் இருந்தவரிடம் இவர் தான் "ரைட்டரா!" என்றார். கேட்கப்பட்டவர் ஆச்சரியமாய் பார்த்து, சில நொடிகள் ஸ்தம்பித்து, "ஆமாம்" என்றார்.

****
உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் வேறு ஒரு காட்சியை எதிர்பார்த்து போயிருந்தேன். சாரு ஒரு பெண்ணை சாட்டிங்கில் மிக கேவலமாக, பொறுக்கித்தனமாக நடந்த கொண்டது, ஆதாரபூர்வமாக பலரும் அறிந்த செய்தி. அந்த நிகழ்வுக்கு பிறகு, பொது மேடையில் இப்பொழுது தான் வருகிறார். ஆகையால், சில பெண்களோ அல்லது பெண்கள் அமைப்போ அல்லது சில சமூக அக்கறை கொண்ட மக்களோ வந்து, செய்த செயலுக்கு 'தகுந்த மரியாதை செலுத்துவார்கள்" என எதிர்பார்த்து போயிருந்தேன். குறைந்தபட்சம் சில செருப்புகளாவது பரிசாக தரப்படும்! என தமிழ்மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள். சாருவே சொல்வது போல, ஆயிரம் பேருக்குள் தான் வாசிக்கிறார்கள். அதைவிட முக்கிய விசயம். மக்கள் எந்த கேவலமான செயலையும், விரைவில் மறந்துவிடுகிறார்கள் என்பது!

சாருவுக்கு தன் புத்தகம் 10 லட்சம் விற்க வேண்டாம், 1 லட்சம் கூட விற்கவில்லையே என தீராக்கவலை. எனக்கு பொறுக்கித்தனத்தை கண்டித்து, மரியாதை தரவில்லையே என்ற கவலை. அவரவர்களுக்கு அவரவர் கவலை. அடுத்த மேடையிலாவது 'தகுந்த மரியாதையை' தருவார்கள் என்ற நம்பிக்கையில், சோகமாய் வீட்டிற்கு நடையை கட்டினேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

****

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

பிரதீப் said...

nicely compiled :-)

Raja senthil kumar said...

http://anbudan-raja.blogspot.com/ ஒரு புதிய முயற்சி உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

kevin said...

செம்ம காமெடில....

குருத்து said...

கருத்துக்களை பகிர்ந்த பிரதீப், கெவின் இருவருக்கும் நன்றி.

mathuran said...

//உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் வேறு ஒரு காட்சியை எதிர்பார்த்து போயிருந்தேன். சாரு ஒரு பெண்ணை சாட்டிங்கில் மிக கேவலமாக, பொறுக்கித்தனமாக நடந்த கொண்டது, ஆதாரபூர்வமாக பலரும் அறிந்த செய்தி. அந்த நிகழ்வுக்கு பிறகு, பொது மேடையில் இப்பொழுது தான் வருகிறார். ஆகையால், சில பெண்களோ அல்லது பெண்கள் அமைப்போ அல்லது சில சமூக அக்கறை கொண்ட மக்களோ வந்து, செய்த செயலுக்கு 'தகுந்த மரியாதை செலுத்துவார்கள்" என எதிர்பார்த்து போயிருந்தேன். குறைந்தபட்சம் சில செருப்புகளாவது பரிசாக தரப்படும்! என தமிழ்மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள். சாருவே சொல்வது போல, ஆயிரம் பேருக்குள் தான் வாசிக்கிறார்கள். அதைவிட முக்கிய விசயம். மக்கள் எந்த கேவலமான செயலையும், விரைவில் மறந்துவிடுகிறார்கள் என்பது!

சாருவுக்கு தன் புத்தகம் 10 லட்சம் விற்க வேண்டாம், 1 லட்சம் கூட விற்கவில்லையே என தீராக்கவலை. எனக்கு பொறுக்கித்தனத்தை கண்டித்து, மரியாதை தரவில்லையே என்ற கவலை. அவரவர்களுக்கு அவரவர் கவலை.

-என தமிழ்மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்-அப்போ நீங்கள் தமிழர் இல்லையா?

-மக்கள் எந்த கேவலமான செயலையும், விரைவில் மறந்துவிடுகிறார்கள் என்பது!-அதனால்தானே பொறுக்கிகள் இன்னும் பதவி, பவிசுடன் பவனி வருகிறார்கள்.
- அடுத்த மேடையிலாவது 'தகுந்த மரியாதையை' தருவார்கள் என்ற நம்பிக்கையில், சோகமாய் வீட்டிற்கு நடையை கட்டினேன். நம்பிக்கை தானே வாழ்க்கை-

அதை நீங்கள் தொடங்கி வைத்திருக்கலாம். பொதுவாக பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதே தமிழர் முதல் சிக்கல்.
குறைந்தது, கனிமொழிக்குக் கொடுத்த முத்தத்துக்காவது , யாராவது வரவேண்டாமா?
முத்தம் கொடுத்ததாகச் சாருதான் சொன்னார்!!- அந்தச் சாட் பெண்ணிடம்...
நித்தியானந்தன் எல்லாவற்றையும் மறந்து யாகம் வைத்துக் கூத்தைத் தொடர்வது போலும், சொர்ண மாலிகா புகழ் சங்கராச்சாரி
பிறந்தநாளுக்குத் தேரில் பவனி வருவதுபோல், சாருவும் துப்பல் வழியும் முகத்தை வாசகர் வட்ட புண்ணியத்தால் துடைத்து விட்டு வெளிவந்துள்ளார்.
வாலி ஐயா- தான் பாவம்! இவர் நுண்மாண் நுளைபுலத்துள் புகுந்து சிக்கிவிட்டார்.
தங்கள் நக்கல் எழுத்துநடை ரசிக்கும் படி உள்ளது

ஊரான் said...

நன்று!