> குருத்து: பொம்மைகள்!

March 3, 2013

பொம்மைகள்!

வண்ண பொம்மை கார்களோ
குண்டு கரடி பொம்மையோ
புதிதாய் எப்பொழுதும் கிடைப்பதில்லை.

வீண் என தூக்கிப்போடும்
வண்டி சக்கரங்களோ
உடைந்த வளையல்களோ தான்
எங்கள் பொம்மைகள்!

இதில் வருத்தம் ஏதுமில்லை!
மகிழ்ச்சியாய் தான் விளையாடுகிறோம்!

0 பின்னூட்டங்கள்: