> குருத்து: 'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

February 28, 2013

'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம்

சன் - கலைஞர் - விஜய் டிவி போன்ற விசபாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாச குத்தாட்டங்களையும்
விளம்பரங்களையும் உடனே நிறுத்து!

பாலியல் வன்முறையைத் தூண்டும்
"மானாட மயிலாட" ஆபாசக் கூத்தை உடனே நிறுத்தக் கோரி

கலைஞர் தொலைக்காட்சி முன்பு

ஆர்ப்பாட்டம்


பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை
தொடர்புக்கு – 9841658457முற்போக்கு பெண்கள் அமைப்பினர் (அமைப்பு பெயர் சரியாக நினைவில்லை) பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா தியேட்டருக்குள் உள்ளே புகுந்து ஆபாச படத்தின் திரைச்சுருளை எடுத்து வந்து தெருவில் எரித்தார்கள். அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது.

அதற்கு பிறகு வீச்சாக தமிழ்நாட்டில் திரைப்பட, ஊடக ஆபாசத்தை கண்டித்து பெரிய போராட்டங்களும் எழவில்லை. புரட்சிகர இயக்கத்தில் பெண்கள் அமைப்பு பலமாக இல்லாததும் ஒரு காரணம்.

இப்பொழுது நாடு முழுவதும் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல் ஒரு பொது விவாதத்திற்கு வந்திருக்கிறது.  பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலை தனிப்பட்ட குற்றமாக (crime) பார்க்கும் பார்வை பலருக்கும் இருக்கிறது. அதனால், தூக்கில் போட வேண்டும், உறுப்புகளை வெட்ட வேண்டும் என பேசுகின்றனர்.

இப்படி கண்ணோட்டம் இருப்பதாலேயே, பலரும் பாலியல் மன வக்கிரங்களை தூண்டும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும், பெண்ணை எளிதில் சோரம் போகும் இழிபிறவிகளாக காட்டும் விளம்பரங்களையும் கண்டிப்பதில்லை. எதிர்த்து போராடுவதில்லை.

பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினரும், அதன் தோழமை அமைப்பினர்களும் தமிழகம் தழுவிய அளவில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் பற்றி நாடு முழுவதும் பரவவேண்டும். இந்த ஆபாச நிகழ்ச்சிகள் எல்லாமும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

போராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

padhivittamaikku nandri pengalukkedheraana vanmuraigalukku thoondudhalaaga ulla tholaikkaatchchigalai ozhippom nandri

Anonymous said...

வாழ்த்துக்கள்