டோரிமான் தொடரில் வருகிற ஜியான் ஒரு முரட்டு பையன். அவன் ஒரு நாள் தெருவில் நடந்து வர, எதிரே வீட்டு நாயொன்று தெருவில் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவனுடன் ஒட்டிக்கொள்கிறது. சிறிது நேரத்தில் ஜியான் வயதில் ஒரு பெண் அந்த நாயை தேடி வருகிறாள். தங்கள் நாய்க்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, மிகுந்த ”நன்றி” சொல்கிறாள். ”தங்கள் நாய், நல்லவர்களிடம் மட்டுமே போகும். நீங்கள் நல்லவர்” என பாராட்டு பத்திரமும் தருகிறாள்.
இந்த ‘நல்ல’ நினைவோடு, உற்சாகமாய் விசிலடித்துக்கொண்டே தெருவில் வருகிறான். எதிரே வந்த பையன் கவனமில்லாமல் இவன் மீது மோத இருவரும் தெருவில் உருள்கிறார்கள். ஜியான் எழுந்து, அந்த ‘நல்ல’ நினைவை நினைத்துப் பார்க்கிறான். மோதிய அதிர்ச்சியில் அந்த ‘நல்ல’ நினைவு கலைந்துவிடுகிறது. செம கடுப்பாகி, மோதியவனை துவைத்து எடுக்கிறான்.
***
மோடியின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகளான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நீட்டை அமுல்படுத்தியது என மக்களை இடைவிடாமல் தொடர்ச்சியாய் தாக்கிக்கொண்டு, எப்பொழுதும் பதட்டமாக தான் வைத்திருக்கிறது. மக்கள் முன்பு சேமித்து வைத்திருந்த சில ’நல்ல’ நினைவுகளும் தொலைதூரத்திற்கு காணாமல் போய்விட்டன.
ஜியான் நல்ல வலுவான பையன். அதனால் எதிராளியை துவைத்து எடுத்துவிட்டான். பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால், நம்மால் துவைக்க முடியவில்லை. நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டு போராடினால், நமக்கும் சாத்தியம் தான்! நமக்கும் நிறைய நல்ல நினைவுகள் நிச்சயமாய் கிடைக்கும்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment