சென்னை மாதிரி பெருநகரங்களில், அவசரகதியில் வாழும் பொழுது, நமது வீட்டு சமையலறைகளைப் பொலவே அதன் நீட்டிப்பாய் அவசர காலங்களில், தேவையான பொழுது பகுதியில் உள்ள நல்ல உணவகங்கள் தான் நம்மை காக்கின்றன.
வீட்டு உணவு போல இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். சுவையாக இருக்கவேண்டும். விலை நமக்கு கட்டுப்படியாகவும் இருக்கவேண்டும். இப்படி பல இருக்கவேண்டும். அப்படி பல உணவகங்கள் அமையாவிட்டாலும், சில உணவகங்களாவது அமைவது மிகவும் அவசியம்.
நாங்கள் வசிக்கும் முகப்பேர் மேற்கு பகுதியில் இயங்கும் இராணி டிபன் சென்டர் அப்படி ஒரு உணவகம். ராணியம்மாள் ஒரு முருக பக்தர். ஆகையால் எப்பொழுதும் முருக கடவுளின் பக்தி பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.
அம்மா, அப்பா, இளைஞரான மகன் கண்ணன் என மூவரும் நடத்திவருகிறார்கள். காலை ஏழு மணி துவங்கி… 11 மணி வரை நீளும். இட்லி, தோசை, வடை, பொங்கல், பூரி உண்டு. சுடச்சுட தோசையும், பூரியும் கிடைக்கும். அதற்கு துணையாக, நல்ல சுவையான சாம்பாரும், இரண்டு வகையான சட்னியும், வடை கறியும், பூரிக்கிழங்கும் உண்டு.
வீடு போல கடை என சொல்லும் பொழுது, சுவையாக இருக்கக்கூடிய சில கடைகளில் வீட்டு களேபரங்கள் அங்கும் நிகழும். கண்டுகொள்ள மாட்டார்கள். ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்கவேண்டும். ஆனால் இந்தக் கடையில் மூவரும் நன்றாக வரவேற்பார்கள். நன்றாகவும் கவனித்துக்கொள்வார்கள்.
ஏற்கனவே கடையில் கூட்டம் அள்ளும். பிறகும், ஏன் எழுதுகிறேன் என்றால்… அங்கு சாப்பிட்ட சாப்பாடு தான் காரணம். வேறு என்னவாக இருக்கமுடியும். நல்ல உணவகங்களை இப்படி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்வது அவசியம். அதனால் பகிர்கிறேன்.
இப்போதைக்கு காலை உணவு மட்டும். மதிய உணவு துவங்கவேண்டும் என அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது. விரைவில் துவங்குவதற்கும், அடுத்தடுத்து முன்னேறுவதற்கும் நாம் வாழ்த்துவோம்.
நன்றி.
- இரா. முனியசாமி
ராணி டிபன் சென்டர்,
369C, விஜிபி நகர்,
பாரதி சாலை,
முகப்பேர், சென்னை – 600037.
தொலைபேசி
8056731464
9600441255
0 பின்னூட்டங்கள்:
Post a Comment