அப்பா ஒரு அறிவியல் ஆசிரியர். தன் மனைவி, பள்ளி செல்லும் மகளுடன் அந்த புது ஊருக்கு வந்து சேர்கிறார்.
January 30, 2024
Curse of Bridge Hollow (2022) குழந்தைகளுக்கான ஜாலியான படம்
அப்பா ஒரு அறிவியல் ஆசிரியர். தன் மனைவி, பள்ளி செல்லும் மகளுடன் அந்த புது ஊருக்கு வந்து சேர்கிறார்.
January 26, 2024
கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சிறப்பாக நடைபெற்றது!
இந்த பதிவு நண்பர்கள் சம்பந்தப்பட்டது! மற்றவர்கள் கடந்து செல்லுங்கள்!
நன்றி.
***
நண்பர்களுக்கு,
வணக்கம்.
இன்று நமது இமேசுகுமார் - மணிமேகலை
தம்பதிகளின் இரண்டு மகன்களில் மூத்தவர் கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
மதுரையில்
இருந்து நண்பர் வேல் – விஜி தம்பதியினரும், (TVS) சரவணன் அவர்களும் கலந்துகொண்டார்கள். ஆங்கில ஆசிரியர் லியோ தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். ரமேசுகுமார் அவர்களின் தம்பி வழக்கறிஞர் ரூபனைப்
பார்த்தோம்.
சென்னையில்
இருந்து, நான் துணைவியாருடன் கலந்துகொண்டேன். இலக்கியா 12 வது படிப்பதால், தேர்வு நெருக்கடியால்
அழைத்து வரமுடியவில்லை. மனோகரன் அவர்கள் கலந்துகொண்டார். நண்பர் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். சங்கர பாண்டியன் தன் குடும்பத்துடன் கலந்துகொண்டார். கண்ணன் வெளி மாநிலத்தில் இருப்பதால்
கலந்துகொள்ள இயலவில்லை. அவருடைய துணைவியார் மீனா, தன் பசங்க இருவருடனும் வந்து கலந்துகொண்டார்.
முன்பே இனியனின்
துணைவியார் உமா தன் பிள்ளைகளுடன் கலந்துகொண்டார்
என வேலு சொன்னார். அவருடைய பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆகையால் அவசரமாய்
கிளம்பிவிட்டார்கள் என சொன்னார்கள்.
மணிமேகலை
அக்காவின் அண்ணன் கபிலன் அவர்களை பல ஆண்டுகள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.
இரமேசுகுமார்
தன் குடும்பத்துடன் அவர்கள் சென்னையில் தான் குடியேறியிருக்கிறார். அவரை விரைவில் வீட்டுக்கு
போய் சந்திக்கவேண்டும்.
சுவையான சாப்பாடு.
மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டு எல்லோரும் விடைபெற்றோம்.
பல ஆண்டுகள்
கழித்து, இப்படி சந்தித்ததில், உரையாடியதில் மகிழ்ச்சி. மதுரை நண்பர்கள் எப்பொழுது
சென்னை வந்தாலும் என்னை அழையுங்கள். சந்திப்போம்.
நன்றி.
January 24, 2024
Fantastic Beasts: The Secrets of Dumbledore (2022)
நல்ல சக்திகளும், தீய சக்திகளுக்குமான மோதல் தான் கதை.
January 16, 2024
kho gaye hum kahan (2023) இந்தி
நாம் எங்கே தொலைந்து போனோம்?
மூவரும் பள்ளிக்காலத்து நண்பர்கள். ஒருவர் ஸ்டாண்ட் அப் காமிக்காக இருக்கிறார். இன்னொருவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் சந்தைப்படுத்தும் பிரிவில் வேலை செய்யும் எம்.பி.ஏ பட்டதாரி. இன்னொருவர் ஜிம்மில் பயிற்சியாளர்.
காமிக் இளைஞருக்கு நீடித்த உறவில் நம்பிக்கையில்லை.
ஆப்பில் பதிந்துகொண்டு,
புதுப்புது பெண்களுடன் வலம்வருகிறார். அம்மாவின் இறப்பு அவனை
கடுமையாக பாதித்திருக்கிறது. அப்பா அவனுக்கு இருக்கும் உளவியல் சிக்கலைப் புரிந்துகொண்டு அவனை கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார்.
அவள் மூன்று வருடம் ஒருவனுடன் காதலில் இருக்கிறார். ஒருநாள் திடீரென பிரேக் அப் என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான். அதனால் மிகவும் சோர்வாக இருக்கிறாள்.
ஜிம் பயிற்சியாளர்
ஒரு சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு பயிற்சியாளராக
இருக்கிறார். இருவருக்குள்ளும்
காதல் உறவு இரகசியமாக இருக்கிறது. அவள் வெளியே சொல்ல மறுக்கிறாள்.
ஜிம் பயிற்சியாளர்
ஒரு ஜிம் வைப்பது தனது இலக்கு என்கிறார். மற்ற நண்பர்கள் இருவரும் அதற்கு துணை நிற்பதாகவும், அதற்காக மெனக்கெடுகிறார்கள்.
ஆனால், நண்பனின் காதலை காமிக் ஒரு திறந்த மேடையில் (பெயரை சொல்லாமல்) வெளிப்படையாக பேச அவன் காயப்படுகிறான். இருவருக்குள்ளும்
பெரிய மனஸ்தாபம் வந்துவிடுகிறது.
பிறகு என்ன ஆனது என்பதை நட்பு, காதல், காமம் என உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
மேட்டுக்குடி இளைஞர்களின்
சிந்தனை, அவர்களின் வாழ்க்கை, பப், குடி, காதல், காமம் எவ்வாறு இருக்கிறது? அவர்களுடைய உறவுகள் அவர்களை எவ்வளவு பதட்டமடைய வைக்கின்றன? சமூக வலைத்தளங்கள்
அவர்கள் வாழ்வில் எவ்வளவு தவிர்க்க முடியாத அளவிற்கு இரண்டற கலந்து இருக்கிறது, அது எவ்வளவு தூரம் அவர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்பதை மூவரின் வாழ்க்கையை கொண்டு வண்ணமயமாய் (!) சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் இறுதியில் வந்தடையும் சில உணர்வுகள் முக்கியமானவை. கவனிக்கத்தக்கவை. உரையாடுதல், எல்லா உறவுகளிலும் மிக முக்கியமானவை. உரையாடுதல் குறைய குறைய மக்கள் ஒன்றாக வாழ்ந்தாலும், அவர்களுக்குள் தூரம் அதிகமாகிக்கொண்டே போகிறது. பேஸ்புக்கில்
ஐயாயிரம் நண்பர்கள் இருந்தாலும், எதார்த்தத்தில்
ஒரு நண்பனை கூட தக்கவைப்பதில்லை. பேருந்தில், ரயிலில் என கூட்டமாய் சென்றாலும் ஒவ்வொருவரும் அவரவர் செல்லில் ஒரு மெய்நிகர் டிஜிட்டல் உலகில் தனித்து உலாவுகிறார்கள்.
இந்த நேரத்தில் பசித்த சிங்கம், ஒன்றாய், கூட்டாய் வாழ்ந்த மாடுகள் கதை நினைவுக்கு வருவது நல்லது. நம்மை வேட்டையாடுவதற்கு முதலாளித்துவ சந்தைக்கு மிக எளிதாகிவிடுகிறது.
சித்தாந்த், அனன்யா, ஆதர்ஷ் கெளரவ் மூவரும் பிரதான பாத்திரத்தில் வருகிறார்கள்.
நம்மை கவர்கிறார்கள்.
அர்ஜூன் வாரன் சிங் இயக்கியிருக்கிறார்.
நெட் பிளிக்சில் தமிழிலும் கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்.