தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html
https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html
https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html
https://gstprofessionalssociety.blogspot.com/2024/01/epf-4.html
https://gstprofessionalssociety.blogspot.com/2024/02/epf-5.html
https://gstprofessionalssociety.blogspot.com/2024/03/epf-6.html
கடந்த ஆறாவது அத்தியாத்தில் ஓய்வூதியம் பெறுகிற
தொழிலாளி உயிரோடு இருக்கிறாரா, அவர் தான் ஓய்வூதியம்
தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய ஆண்டுக்கு
ஒருமுறை குறிப்பாக நவம்பர் 30க்குள் வாழ்வு சான்றிதழை (Life Certificate) தர
கோருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் என முடித்திருந்தோம்.
முன்பு இந்த வாழ்வு சான்றிதழை பதிவு செய்வதற்கு
நேரடியாக பி.எப். அலுவலகம் வரவேண்டியிருக்கும்.
வழக்கமாகவே பி.எப். அலுவலகத்தில் மக்களின் வரவு அதிகமாக இருக்கும். ஆண்டின் இறுதி மாதத்தில் கூட்டம் அலைமோதும்.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க சில வருடங்களுக்கு
முன்பு… டிஜிட்டலாக வாழ்வு சான்றிதழை
சமர்ப்பிக்க ஒரு வழி கண்டுப்பிடித்தது.
அந்த அரசு இணையத் தளத்தின் பெயர். https://jeevanpramaan.gov.in/
இந்தத் தளத்தின் வழியாக 127 லட்சம் தங்களது
வாழ்வு சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள் என தளமே முதல் பக்கத்தில் தகவலாக
தருகிறது.
தளத்தின்
உள்ளே நுழைவதற்கு சம்பந்தப்பட்ட பணியாளின் மின்னஞ்சலை கொடுத்தால்… நம்முடைய மின்னஞ்சலை உறுதிப்படுத்த ஒரு ஓடிபி
(One Time Password) வந்து சேரும். நமது மின்னஞ்சலைத் திறந்து, அந்த ஓடிபியை எடுத்து தளத்தில்
பதியவேண்டும். அதற்கு பிறகு, நமக்கு மென்பொருளை (Software) அனுப்பிவைப்பார்கள்.
இந்த
வாழ்வு சான்றிதழை தருபவர்கள் ஓய்வுப் பெற்றவர்களாக, பெரும்பாலும், வயதானவர்களாக
இருப்பதால், அவர்களாகவே தளத்தின் வழியே சான்றிதழை பெறுவதற்காக சிரமப்படுவார்கள்
என்பதற்காக.. இசேவா மையம், வங்கிகள் என
சில ஏற்பாடுகளை செய்து தந்திருக்கிறது. அங்கு
இந்த சேவையை பெறலாம். இந்த
தளத்திலேயே பணியாளருடைய மாநிலம், மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் அருகில்
உள்ள மையத்தை அதுவே உங்களுக்கு காட்டுகிறது. பயன்படுத்திக்கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட
இசேவை (E seva) மையத்துகாரர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தால், முதலில் தளம்
தருகிற ஒரு மென்பொருளை கணிப்பொறியில் பொருத்திக்கொள்ளவேண்டும் (Install). அதற்கு பிறகு, அந்த ஆபரேட்டர் தன்னுடைய ஆதார்,
மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை கொடுக்கிறார். ஆதார் ஓடிபியைப் பெற்று அதைக்
கொடுத்ததும், முதல் நிலையில் சரிப்பார்த்தால் முடிந்துவிடுகிறது. அடுத்து, எந்த பணியாளருக்கு பதிவு
செய்யப்போகிறாரோ, அவருடைய ஆதார், மொபைல் எண், மின்னஞ்சல் வைத்திருந்தால்
மின்னஞ்சல் கொடுக்கலாம்.
அடுத்து,
பணியாளருடைய அடிப்படை விவரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும். பெயர், என்ன வகையான பென்சன் பெறுகிறார்? பணியாளர்
பெறுகிற ஓயூதியமா? அல்லது அவர்களுடைய குடும்பத்தினர் பெறுகிற ஓய்வூதியமா? என்கிற விவரங்களில் ஒன்றை
தேர்ந்தெடுக்கவேண்டும்.
அவருக்கு
ஓய்வூதியம் வழங்கும் அமைப்பு எது? (இந்த
வாழ்வு சான்றிதழ் என்பது பி.எப். தளத்திற்கு மட்டுமில்லை. பி.எப். ஓய்வூதியம் வழங்குவது போலவே, மத்திய அரசு,
மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என பல
அமைப்புகள் வழியாக பென்சன் வழங்குவதற்கும்
வாழ்வு சான்றிதழை இந்த தளத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை
புரிந்துகொள்ளவேண்டும்.) பணியாளருக்கு எந்த வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுகிறார்
என்பதை பதிவு செய்யவேண்டும். அவருடைய
அடையாள எண் ஓய்வூதிய அடையாள எண் (PPO – Payment Pension order Number) எது? என்கிற
அடிப்படை விவரங்களை பதியவேண்டும்.
அடுத்த
நிலையில், இரண்டு கேள்விகளை எழுப்பும்.
ஒரு பணியாளர் ஓய்வுக்கு பிறகும், வேலையை தொடர வாய்ப்பிருக்கிறது. அப்படி தொடர்கிறீர்களா? என கேட்கும். அதற்கு
பொருத்தமான பதிலை தரவேண்டும். இரண்டாவது
கேள்வி, ஒரு பணியாளர் இறந்தநிலையில் அவருடைய துணைவியார்/வாரிசுகள் ஓய்வூதியம்
பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவருடைய துணைவியாராக இருந்தால்… மறுமணம்
புரிந்துகொண்டீர்களா? என கேட்கும். அதற்கும் பொருத்தமான பதிலை தரவேண்டியிருக்கும்.
அடுத்த நிலையில் பணியாளருடைய விரல் ரேகையை அவர்கள் வைத்திருக்கும் ஸ்கேனரில் வைத்து பதிவு செய்யவேண்டும். அது வெற்றிகரமாக நடந்தேறியதும், ஒரு சான்றிதழ் உருவாகிவிடும். அதை பிரிண்டரில் எடுத்து தந்துவிடுவார்கள். அதைப் பாதுகாப்பாக பணியாளர் வைத்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் வளரும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment