இன்று காலையில் இரமேஷ்குமார் சார், மணிமேகலை அக்கா அவர்களுடன் காலையில் பாண்டிச்சேரி விரைவு ரயிலில் சென்று திருமணத்தில் நானும் கலந்துகொண்டேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு காலை வேளையில் ரயிலில் பயணம் நன்றாக இருந்தது. மதுரை நண்பர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே போனதில் நேரம் போனதே தெரியவில்லை.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என சொல்வார்களே, அச்சிறுப்பாக்கத்தில் சின்ன குன்று, அங்கு தான் … இனியன் – உமா அவர்களின் மகள் “அறிவுமதி – ஜகதீசன்” திருமணமும் நடைபெற்றது. அறிவுமதி நல்ல உயரம். உமாவையும், இனியனையும் நினைவுப்படுத்தினார்.
நேற்று அந்த பகுதியில் மழை பெய்து இருந்ததால், வெயில் அடித்தாலும், வலிக்காத அளவிற்கு குளுமையாகவும் இருந்தது. அங்கிருந்து பார்த்தால், ஊரை நன்றாக பார்க்க முடிந்தது.
முருகன் அகத்தியருக்கு அருளிய இடம் என கோயிலில் எழுதியிருந்தார்கள். தெற்கு முகமாக நிற்கும் முருகன் அபூர்வம் என்றார். இந்த முருகன் கோயிலும், இராஜஸ்தானில் ஒரு முருகன் கோயிலும் என இரண்டு கோயில்கள் மட்டுமே உண்டு என இரமேஷ்குமார் சார் தகவலைச் சொன்னார். ”முருகன் எங்க! எப்ப இராஜஸ்தான் போனாரு” என உமா சீரியசாய் கேள்விக்கேட்டார்.
மதுரையில் இருந்து, மோகன் – கயல் குடும்பம், வேல் - விஜி குடும்பம் சகிதமாய் வந்திருந்தார்கள். எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அய்யப்பன் தனியாக வந்திருந்தார். இப்பொழுது சிபிஐ வழக்குகளை மட்டுமே கையாள்வதாய் தெரிவித்தார். மகிழ்ச்சி.
நம்ம டிவிஎஸ் சரவணன் அவர்கள் கடைசி நேர நெருக்கடியில் வர இயலவில்லைஎன தெரிவித்தார்கள்.
பிறகு திருமண வீட்டுக்காரர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு கிளம்ப, சென்னைக்காரர்கள் சென்னை திரும்பிவிட்டோம். மற்ற மதுரை நண்பர்கள் இன்று இரவு பாண்டியன் விரைவு ரயிலில் கிளம்புவதாக தெரிவித்தார்கள்.
அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.
”வாழ்க மணமக்கள்”
0 பின்னூட்டங்கள்:
Post a Comment