நோலன் படம், அறிவியல் படம், ஆகையால், இங்கிலீஷ் சப்டைட்டில் எல்லாம் நமக்கு பத்தாது என காத்திருந்தேன். இப்பொழுது தமிழிலும் வந்துவிட்டதாய் நண்பர் தெரிவித்தப் பிறகு பார்த்தேன். இப்பொழுதும் முழுவதும் புரிந்ததாய் இல்லை. இருந்தும் நம்ம கருத்தையும் உலகுக்கு சொல்வது அவசியம் எனப்பட்டதால்…!
***
ஓப்பன்ஹைமர் காலம் (1904 – 1967). முதல் உலகப்போரில் தோற்று, நொந்து நூடுல்சான
ஜெர்மனை, அதையே காரணமாய் காட்டி இரண்டாம் உலகப்போருக்கு நகர்த்தி, உக்கிரமாய் சண்டை
நடந்து கொண்டிருந்த காலம்.
ஓப்பன்ஹைமரை படத்திலேயே சிலர் ராபர்ட் (Julius Robert
Oppenheimer) என்றே அழைக்கிறார்கள். நாமும்
அப்படியே அழைப்போம். ஒரு இயற்பியல் விஞ்னானி.
ஒரு யூதரும் கூட. அமெரிக்க அரசு அவரை ஒரு அணுகுண்டு தயாரிக்க சொல்லி
தூண்டுகிறது. உலகம் அமைதி பெறவேண்டும். அதற்கு
ஜெர்மனை வீழ்த்த வேண்டுமென்றால், ஒரு வலுவான ஆயுதம் வேண்டும் என்பதை ஏற்கும், அவர்
மற்ற விஞ்ஞானிகளையும் ஒருங்கிணைக்கிறார். சில விஞ்ஞானிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள்.
அதற்காக ஒரு நகரை உருவாக்குகிறார்கள். ஒரு பெருங்கூட்டமாய் விஞ்ஞானிகள் தங்கள் குடும்பத்தோடு
வந்து குடியேறுகிறார்கள். பெரும் பணம் செலவிடப்படுகிறது.
மூன்று ஆண்டு காலம் உழைத்து, அவர்கள் நினைத்தது போலவே ஒரு அணுகுண்டை உருவாக்கிறார்கள்.
சோதனையும் செய்கிறார்கள். இதற்கிடையில் டுவிஸ்ட் என்னவென்றால், போரில் ஜெர்மனி தோற்று,
உலகையே தனக்கு கீழே கொண்டு வந்துவிட என நினைத்த தலைவன் தற்கொலை செய்துகொள்கிறான்.
போர் முடியும் தருவாயில், இப்பொழுது ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தில் தாக்குதல் நடத்துகிறது. ஜெர்மனிக்காக தயாரித்த குண்டை, அமெரிக்கா ஜப்பானின்
இரண்டு நகரங்களில் குண்டை தூக்கி போடுகிறது. சில லட்சங்களில் உடனேயும், அதற்கு பின்
வந்த காலத்திலும் மக்கள் மாண்டுபோகிறார்கள்.
குற்ற உணர்வில் வருத்தப்படுகிறார்.
அமெரிக்காவின் பிரதமரை சந்திக்கும் பொழுது, அவர் மகிழ்ச்சியாய்
வாழ்த்து சொல்லும் பொழுது, இவர் ”தன் கைகளில்
ரத்தம் தோய்ந்திருப்பதாக” சொல்கிறார். பிரதமரோ
“தயாரித்தது மட்டும் தான் நீங்கள். ஜப்பானில் போட்டது நான் தான்!” என்கிறார். தன் செயலரிடம்
”இந்த மாதிரி அழுகுணிகளை எல்லாம் இங்கு அழைத்து வராதீர்கள்” என பிரதமர் எரிச்சல் அடைகிறார்.
அமெரிக்க அரசு ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான வேலைகளில்
ஈடுபடுகிறது. இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அமெரிக்க தயாரித்த நான்கு ஆண்டுகளில், ரசியாவும் அணுகுண்டு தயாரித்து சோதித்துவிடுகிறது.
”அணுகுண்டின் தந்தை” போற்றிய அமெரிக்க அரசு, இப்பொழுது
அவர் பொதுவுடைமை தத்துவத்தின் மீது ஈர்ப்பும், அமெரிக்க வந்த சமயத்தில் சக விஞ்னான
ஆசிரியர்களை இணைத்து ஒரு சங்கமும் உருவாக்க முயன்றார். பொதுவுடைமைவாதிகள் சிலரோடு (அவருடைய சகோதரர், காதலி
பொதுவுடைமைவாதிகள்) நட்பில் இருக்கிறார்கள்.
ஆகையால், இவர் ரசியாவிடம் ரகசியங்களை விற்றார் என குற்றஞ்சாட்டுகிறது.
துறை சார்ந்த ஒரு விசாரணை, FBI விசாரணை, நீதிமன்ற விசாரணை
என அவரை விடாமல் துரத்துகிறது. அதிலிருந்து மீண்டு வந்தாரா? என்பதையும் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
***
நெருப்பை இந்த உலகுக்கு கொண்டு வந்தவர் என கிரேக்கத்தில் Prometheus என ஒரு கடவுள் உண்டு. . இவரை அமெரிக்காவின் பிரமோதியஸ் என புத்தகம் ஒருவர் எழுத, அதை அடிப்படையாக கொண்டு தான் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் நோலன்.
நோலன் படம் எப்பொழுது நேர்கோட்டில் சென்றது? அவருடைய தொடர்
செயல்பாடுகளும், அவர் மீதான விசாரணையும் முன்னும் பின்னுமாய் பின்னி பிணைந்து வந்துகொண்டே
இருக்கின்றன. படம் பார்த்த பின்பு, மேலே எழுதிய புரிதல் நிச்சயம் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வரலாறு, அரசியல் புரிந்துகொள்ள கொஞ்சம் படிக்கவேண்டியிருந்தது.
நோலன் அந்த விஞ்ஞானியின் வரலாற்றை, அரசியலை பதிவது என்பதை
விட மனநிலையை பதிவதில் நோலன் மிகவும் முயன்றிருக்கிறார். படம் முழுவதும் பேச்சு தான். அந்த சோதனையை மேற்கொள்ளும் பொழுது, இதன் தொடர் விளைவுகளால்
உலகம் மொத்தமும் அழிந்து போகுமோ என்ற எண்ணமும் ஓரத்தில் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. அந்தப் பட்டனை அழுத்தும் விஞ்ஞானிக்கு கை நடுங்கும். ஹிரோசிமா, நாகசாகி அதன் விளைவுகளை அறிந்திருக்கும்
நமக்கும் பதட்டமாகிறது.
படத்தில் சம காலத்தை சேர்ந்தவரான ஐன்ஸ்டீனிடம் ராபர்ட்டுக்கு
ஒரு சந்திப்பு நடக்கும். அந்த சந்திப்பின் வசனங்கள் மிகவும் முக்கியமானது.
அமெரிக்கா எல்லா நாடுகளையும் மிரட்டி உலகை வலம் வருவதற்கு
இந்த அணுகுண்டு துவக்கப்புள்ளி என படம் பார்த்தப்பின்பு தோன்றியது. இன்றைக்கும் அதன் ஆயுத, அரசியல் பலத்தை வைத்து தான்
உலகை மிரட்டி வருகிறது. அவர்களின் அரசியல்
வீழ்ச்சியை உலக நாடுகளே எதிர்பார்த்து வருகிறது.
அமேசான், Zee5 ல் இருப்பதால் இருப்பதாக just watch தளம்
சொல்கிறது. இந்தப் படம் பற்றி உங்கள் கருத்து
என்ன?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment